இந்தியஇந்திய அரசியலமைப்புச் அரசியலமைப்பசடம்பகுதி-1
- இந்தியாவிற்கு தனியாக முதன்முதலில் அரசியலமைப்புச் சட்டம் வேண்டும் என்று கூறியவர் M.N.ராய்.
- அமைச்சரவை தூதுக் குழுவின் பரிந்துரையின் படி அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்ட ஆண்டு 1946.
- அரசியல் நிர்ணய சபை அமைக்கும் போது அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 389.
- அரசியல் நிர்ணய சபை அமைக்கும் போது அதன் தற்காலிகத் தலைவராக இருந்தவர் சச்சிதானந்த சின்கா.
- அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் மற்றும் ஆண்டு 09/12/1946.
- அரசியல் நிர்ணய சபையின் இரண்டாவது கூட்டம் நடைபெற்ற நாள் மட்டும் ஆண்டு 11/12/1946.
- அரசியல் நிர்ணய சபையின் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
- அரசியல் நிர்ணய சபையின் துணை தலைவர் H.C.முகர்ஜி.
- அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகர் B.N.ராவ்(பெனிகல் நர்சிங் ராவ்).
- அரசியல் நிர்ணய சபை,அரசியலமைப்பு சட்டம் இயற்றும் பணியை வரைவுக்குழுக்கு கொடுத்த ஆண்டு 1946.
- வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்.
- 1947 ஆகஸ்ட் 29 அன்று வரைவுக்குழுவின் தலைவராக டாக்டர் அம்பேத்கர் தேர்வு செய்யப்பட்டார்.
- அரசியலமைப்பு சட்டத்தின் குறிக்கோள்,தீர்மானம் பற்றிய தீர்மானத்தை அரசியல் நிர்ணய சபையில் கொண்டு வந்தவர் டாக்டர் அம்பேத்கர்.
- இந்திய அரசியலமைப்பின் சிற்பி தந்தை,நவீன மனு என அம்பேத்கர் அழைக்கப்படுகிறார்.
- அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கு இந்தியா 2 வருடம் 11 மாதம் 18 நாட்கள் எடுத்துக் கொண்டது.(மூன்று வருடத்திற்கு 12 நாட்கள் குறைவு).
- அரசியல் அமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்பாக அரசியல் நிர்ணய சபை 11 கூட்டம் கலந்துரையாட 114 நாட்கள் எடுத்துக் கொண்டது.
- உலகின் நீளமான எழுதப்பட்ட அரசியல் அமைப்பை கொண்டது இந்தியா.
- அரசியல் நிர்ணய சபையில் இடம் பெறாத தலைவர்கள் காந்திஜி முகமது அலி ஜின்னா.
- மொத்தம் 60 நாடுகளில் அரசியல் அமைப்பை ஆராய்ந்து இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.
Tags:
TNPSC