பொருளியலின் இரண்டு பிரிவுகள்:
- நுண்ணியல் பொருளாதாரம்
- பேரியல் பொருளாதாரம்
என இரு பிரிவுகள் உள்ளன.
தேசிய வருவாய் (நாட்டு வருமானம்) என்றால் என்ன?
ஒரு நாட்டில் ஓர் ஆண்டு காலத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் மதிப்பு மற்றும் பணிகளின் மதிப்பைக் குறிப்பதாகும்.
வேலையின்மை என்றால் என்ன?
வேலை செய்ய தகுதியும் விருப்பமும் இருந்தும் வேலை கிடைக்காமல் இருப்பது வேலையின்மை என்று பெயர்.
உலகத்துவம் என்பதன் பொருள் யாது?
பன்னாட்டு வாணிபத்தில் நாடுகளை இணைப்பதன் மூலம் உலக முன்னேற்றத்தை எதிர்நோக்கும் உலகமயமாக்குதல் என்பதாகும்.
கலப்பு பொருளாதாரம் என்றால் என்ன?
கலப்பு பொருளாதாரம் என்பது தனியார் துறை மற்றும் பொதுத்துறை இணைந்து பொருளாதார மேம்பாட்டிற்கு பணியாற்றுவது. இதில் முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் இணைந்த கலவையாகும்.
பொருளாதார அமைப்பு என்றால் என்ன?
மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையைக் குறிப்பது.இதைக் கூறியவர் ஏ.ஜே.பிரவுன்.
பொருளாதாரத்தின் அடிப்படை நடவடிக்கைகள் யாவை?
- உற்பத்தி நடவடிக்கை
- நுகர்வு நடவடிக்கை
பொருளாதார அமைப்பு முறைகள் என்றால் என்ன? பொருளாதார அமைப்பு முறை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மக்களையும்.நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும்.
சிகப்பு நாடா நிலை என்றால் என்ன?
அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகளே எடுப்பதால் அலுவலர்களின் அனுமதி பெற கோப்புகள் மேஜையில் தங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. இதை சிவப்பு நாடா நிலை என்பர்.
வருவாய் வட்ட ஓட்டம் என்பதன் பொருள் யாது?
பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவது ஆகும். இந்நிறுவனம், குடியிருப்பு அரசாங்கம். மற்றும் நாடுகளுக்கிடையே வருவாய் பொருட்கள் மற்றும் பணிகள் மற்றும் உற்பத்தி காரணிகளின் ஓட்டத்தைக் குறிப்பதாகும்.
தனிநபர் வருமானம் என்றால் என்ன?
தனிநபர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்கும் மொத்த வருமானம் ஆகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP):
நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP):
நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP - தேய்மானம்.