ஊமை பேசிய கோவில்

வெண்ணிமுத்து அய்யனார் கோவில் (VENNIMUTHU AYYANAR TEMPLE)




வணக்கம்; நாம் இன்று வெண்ணிமுத்து அய்யனார் திருக்கோயிலில் நடக்கும் அதிசியங்களையும் அய்யனாரின்  மகிமைகளையும் காண்போம்.

இக்கோயில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம் எம்.இலுப்பைகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள அய்யனார் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரக்கூடியவர்.இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் வேண்டியதை மனதில் நினைத்து கொண்டு கோயிலுக்கு மணி அடித்து தருவதாக வேண்டி கொள்வர். வேண்டிய ஒராண்டுக்குள் அவர்கள் வேண்டுதல் நிறைவேறுவது அவர்களுக்கே சில நேரங்களில் ஆச்சரியம் ஏற்படுவது உண்டு.

இக்கோயிலுக்கு என்ன தனி சிறப்பு என்றால் ஊமை பேசிய வரலாறு இக்கோயிலுக்கு உள்ளது. இந்த அறிவியல் உலகில் இவற்றை சிலர் நம்பமாட்டார்கள்.ஆனால் அதுதான் உண்மை. இப்போது அந்த பெண்மணிக்கு நாற்பது வயது  இருக்கும் 
இச்சம்பவம் நடந்தது சுமார் 30 வருடங்கள் இருக்கும்.இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.
                          
இவை மட்டும் அல்ல ஓடிப் போன மகன் திரும்ப வந்தது என பல்வேறு அதிசியங்கள் நடந்துள்ளது.
                        
இங்கு மூலவர் சன்னதியில்
ஐந்து தலை நாகர் இடம்பெற்றள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற அய்யனார் கோவில்களில் இப்படி பார்க்க முடியாது.
                          
நீங்களும்  ஸ்ரீ வெண்ணிமுத்து அய்யனார் திருக்கோயிலுக்கு  வாருங்கள் அவர் அருள் பெருங்கல்.

இடம் (LOCATION):
         

தீதும் நன்றும் பிறர் தர வாரா

2 Comments

Previous Post Next Post