நாம் கடவுளிடம் வேண்டியது நமக்கு கிடைக்கவில்லை எனில் கடவுளை குறை கூறுவோம். நாம் வேண்டியதை கடவுள் ஏன் தரவில்லை என்று நினைத்து பார்ப்பது இல்லை
அதற்கான காரணங்களை இங்கு காண்போம் .ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் அதற்கான காரணங்களை விளக்குகிறேன்
உதாரணம் 1:
நீங்கள் இப்போது கடவுளிடம் சென்று ஒரு நான்கு சக்கர வாகனத்தையோ அல்லது எனக்கு ஒரு வீடோ வேண்டும் என வேண்டுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஜோதிட ரீதியாக இவை இரண்டும் 4ம் பாவத்தை குறிக்கும்.ஜோதிடத்தில் ஒரு பாவம் இயங்கும் போது அதற்கு திரிகோண பாவங்களும் இயங்கும்.ஒருவருக்கு தசையோ புத்தியோ 8ம் பாவத்தை கையில் வைத்து இயங்கும் போது அது நமது ஆயுளுக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் அல்லது தீராத கடன் பிரச்சினையை ஏற்படுத்தும் இங்கு 8 ம் பாவத்திற்கு திரிகோணம் (4,8,12) . இப்போது வாகனம் அல்லது வீடு எனக்கு வேண்டும் என்று கடவுளை வேண்டும் போது நாம் வேண்டியதை கடவுள் தந்தால் நமக்கு பிரச்சனைகள் தான் ஏற்படும் இதனால் கடவுள் நமக்கு அதை தருவதில்லை.
இதில் இன்னொரு விசயமும் உள்ளது அதையும் பார்ப்போம்.அது என்னவென்றால் சிலர் கடவுளிடம் வேண்டாமலையே கடன் வாங்கி வீட்டை கட்டுவர் அந்த வீட்டால் இவருக்கு கடன் சுமையும் ஆயுள் பாதிப்பும் பல அசிங்க அவமானங்களையும் ஏற்படுத்தும் சிலர் கடவுள் ஏன் அதை தடுக்கவில்லை என்றும் கேட்பர் அதற்கு ஒரே காரணம் நம் கர்ம வினையே போன பிறவியில் நாம் செய்த சேட்டைகளை அனைத்தும் கடவுள் அறிவார் நமக்கு அது தெரியாதல்லவா?
இதனால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்று மட்டும் எண்ணாதிர்கள் அவர் உங்களை காப்பாற்ற நினைக்கும் போது உங்கள் கர்ம வினைகள் அதற்கு தடையாக இருக்கும்.
நீங்கள் கர்மவினைகளை பற்றி கவலைப் படாதீர்கள் நம் துன்பங்களை அவர் அறிவார் எப்படி பட்ட சூழ்நிலையிலும் அய்யனை நம்புவதை மட்டும் விட்டுவிடாதீர்கள் அவர் பார்த்து கொள்வார்
அழகுநாச்சி அம்மன்
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்
