ஊராட்சிகளின் வரவு செலவு கணக்குகளை பார்வையிடுவது எப்படி?

ஊராட்சிகளின் வரவு செலவு கணக்குகளை அறிவதற்கும் மற்றும் திட்டங்களை வகுக்கவும் பஞ்சாயத்து ராஜ் என்ற சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது


ஊராட்சி வரவு செலவு கணக்குகளை பார்வையிட 


உங்கள் ஊரில் உள்ள திடக்கழிவு பற்றிய புகாருக்கு இந்த   செயலியை தரவிறக்கம் செய்யவும் 


கிராம சபை கூட்டத்தின் நோக்கம்:
கிராம சபை கூட்டங்கள் கட்டாயம் 4நடத்தப்பட வேண்டும் என்பது அரசாங்க சட்டம்.கிராம சபை கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 என வருடத்திற்கு  நான்கு நாட்கள் நடைபெறும்.
1) ஜனவரி 26: 
வருடத்தின் திட்ட அறிக்கை வைத்து ஒப்புதல் வாங்குதல்
2)மே 1:
வளர்ச்சி பணிகள் மூலம் பயன்பெற்றவர்களின் பட்டியல் மற்றும் கிராமத்தின் வளர்ச்சிக்காக ஊராட்சி ஒப்புதல் அளித்த திட்டங்களை பற்றி கலந்துரையாடல்.
3)ஆகஸ்ட் 15 :
கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தினால் கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பற்றி விவாதித்தல்
4) அக்டோபர் 2: 
அந்த ஆண்டிற்கான செலவு செய்யப்பட்ட கணக்குகள் கிராம சபையில் தாக்கல் செய்ய வேண்டும்.

இன்றைய திருக்குறள்:

இன்னா செய்தாரை ஒருத்தல் 
அவர்நாண 
நன்னயஞ் செய்து விடல்

நமக்கு தீங்கு செய்தவரைப் தண்டிப்பதற்கு சரியான வழி அவர் வெட்கி தலைகுனியும் படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.

Post a Comment

Previous Post Next Post