மனிதனுக்கு தூக்கம் இன்றியமையாத ஒன்று.ஒரு நாளைக்கு குறைந்தது 6 மணிநேரம் மனிதன் தூங்க வேண்டும்.
சிலருக்கு தூக்கம் என்ற ஒன்றே கிடைக்காத ஒன்றாக இருக்கும்.இன்னும் சிலர் தினமும் தூக்க மாத்திரை போட்டுதான் தினமும் தூங்குவர்.இதற்கு அறிவியல் காரணங்கள் பல இருந்தாலும் மகாபாரதத்தில் வரும் விதுரர் கூறும் நியதிகளை பற்றி இங்கு காண்போம்.
விதுர நீதி:
விதுரர் உறக்கம் வராமல் தவித்த திருதராஷ்டரிடம்
கீழ்க்கண்ட வர்கள் உறக்கம் வராமல் தவிப்பர் என்று கூறுகிறார்.
1) தன்னை விட பலவானிடம் மோதுபவன்
2) ஒரு காரியத்தை செய்ய நினைத்து அதற்கான சாதனம் இல்லாமல் இருப்பவன்
3) காம வயப்பட்ட வன்
4) திருடன்
மேலும் விதுரர் கூறுகிறார் திருதராஷ்டிரா நீ இவற்றில் இருந்து விடுபட்டவன் இருந்தும் நீ உறக்கம் வராமல் தவிக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் உண்டு அது பிறர் பொருளை அபகரிப்பது.பிறர் சொத்தை அபகரிப்பது பெருங்குற்றம் ஆகும்.நீ நியாயமாக கிடைக்க வேண்டிய நாட்டவரின் பங்கை தர மறுக்கிறாய் அதனால் உறக்கம் வராமல் தவிக்கிறாய் என்று கூறினார்.
பிறர் சொத்தை அபகரிப்பவர்களுக்கு தூக்கமின்மையும் தீராத பாவமும் வந்து சேரும்.
மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்.
Tags:
life