ஏன் என்னை கடவுளே தர்ம வழியில் நடத்த கூடாது???

ஏன் கடவுளே நம்மை தர்ம வழியில் நடத்த கூடாது என்று திருதராஷ்டிரன் விதரரிடம் வினா எழுப்பினார். 

மேலும் நாம் அதர்ம வழியில் செல்வது போல் தெரிந்தால் ஏன் கடவுளே நம்மை தடுக்க கூடாது என்றும் வினா எழுப்பினார்.
அதற்கு விதுரர் கூறிய பதிலை இப்போது பார்ப்போம். 

விதுரர் அதற்காக தான் இறைவன்  உங்களுக்கு புத்தி என்ற ஒன்றை கொடுத்துள்ளார்.நீங்கள்தான் எது தர்மம் எது அதர்மம் என்று ஆராய வேண்டும்.தர்மத்தின் வழியில் செல்வதாக இருந்தால் கடவுள் நிச்சயம் உங்களுக்கு உதவி புரிவார்.
தர்மம் என்றால் என்ன என்று உணர்த்துவதற்காக தான் ஞானிகள் தோன்றி மறைந்துள்ளனர்

சிலர்  உயிரும்உடம்பும் ஒன்று என்று கருதுவார்கள்.கண்ணுக்கு தெரியாத எதையும் நம்ப மாட்டார்கள்.
அப்படி நினைப்பது சரி என்றால் நாம் பார்க்காத விசயங்களை இல்லை என்று கூற கூடாது.நமது எல்லை சிறியது என்றும் நமது அறிவு அவ்வளவுதான் என்பதையும் புரிந்து கொள்ள ‌வேண்டும்.
உதாரணமாக சுவற்றிற்கு பின்னால் என்ன உள்ளது என்பது நம் கண்களுக்கு தெரியாது, அதனால் சுவற்றிற்கு பின்னால் எதுவும் இல்லை என்று கூறிவிட முடியாது.அப்படி எதுவும் இல்லை என்று நினைத்தால் அது நமது முட்டாள்தனம்.

உடம்பும் உயிரும் ஒன்று என்று நினைப்பவர்கள் உடல் சுகத்திற்கு ஆசைப்பட்டு எதையும் செய்துவிடுவார்கள்.உதாரணமாக பிறர் பொருளை ஒருவர் பிடுங்கி அனுபவித்தாள் அது உடலுக்கு நன்மையும் உயிருக்கு பாவத்தை சேர்த்து விடும் என்று கூறியுள்ளார் .எனவே நமக்கு உயிர் (ஆத்மா) சிந்தனை முதலில் வர வேண்டும் என்று கூறுகிறார்.

கடவுளே என்னை வழிநடத்து என்று கூறினால் அவர் நிச்சயம் வழி நடத்துவார்.

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்

Post a Comment

Previous Post Next Post