ஐந்து முறை தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த இவர் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பல சமூக பொருளாதார திட்டங்களை இவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இவரது 5 முறை ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் செயல்படுத்திய சில புதுமையான திட்டங்களாவன:
1969-1976
- உலக தமிழாராய்ச்சி நிறுவனம் 1970.
- SAIL(செய்ல்) அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உருக்காலை அமைக்கப்பட்டது-1970.
- தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 1971ல் தமிழ்நாடு குடிசை பகுதிகள் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
- மாநிலத் திட்டக்குழு-ஏப்ரல் 1971.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்-1972.
- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி-1971.
- பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்-1971.
- கை ரிக்சாவின் பயன்பாடு ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்சா அளிக்கப்பட்டது-1973.
- கோவையில் தமிழக வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது.
- 15 ஏக்கர் வரை உரிமை தரும் நில உச்சவரம்பு சட்டம்.
- மனு நீதித் திட்டம்.
- அகர முதலி திட்டம் குழு 1974.
- அரசு ஊழியர்கள் குடும்ப நலத்திட்டம்.
- இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டது.
- அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் நிறுவுதல்.
- வேலைவய்ப்பிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு.
1989-1991
- மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு.
- பட்டியல் சாதியினருக்கு 18 சதவீதமும் பழங்குடியினருக்கு ஒரு சதவீதமும் இட ஒதுக்கீடு.
- சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம்.
- விவசாயத்திற்கு இலவச மின்சாரம்.
- முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி.
1996-2001
- உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு விலை பருள்கள் இடைத்தரகர்கள் இல்லாமல் வாடிக்கையாளர்களிடம் சென்று சேர்த்தல்-1999.
- மெட்ராஸ் சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது ஜூலை 17 1996.
- அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் பெரியார் சமத்துவபுரங்கள் 1996.
- 24 மணி நேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார மையங்கள்.
- நாட்டில் முதலாவதாக மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி நிதி ஒதுக்கீடு.
- நாட்டில் முதல் முறையாக அம்பேத்கர் சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் 1997.
- மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்.
- நமக்கு நாமே திட்டம்.
- மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள்.
- தமிழ் இணையக் கல்விக்கழகம்.
2006-2011
- இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம்.
- இலவச தொலைக்காட்சி.
- 2 ஏக்கர் வரை இலவச நிலம் வழங்கும் திட்டம்.
- ஊனமுற்றோருக்கான சிறப்பு நலவாரியம் 2006, 30 சிறப்பு நல வாரியங்கள் அமைக்கப்பட்டன.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2006.
- வருமுன் காப்போம் திட்டம் 2006.
- தகுதித்தேர்வு ஒழிப்பு 2006.
- இலவச சமையல் எரிவாயு மற்றும் மானியம் 2007.
- நாட்டில் முதன்முதலாக திருநங்கைகள் நல வரியம் 2008.
- 108 ஆம்புலன்ஸ் திட்டம் 2008.
- சரியான நேரத்தில் கடனை செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி.
- வாரத்திற்கு 5 முட்டை வாழைப்பழம் சத்துணவு வழங்கும் திட்டம.
- கலைஞர் காப்பீட்டு திட்டம் 2009.
- உலக செம்மொழி மாநாடு கோவை 2010.
- செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மைசூரில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.
- அனைவருக்கும் கல்வி திட்டம்.
- பின்தங்கிய வகுப்பினர்களுள் முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு.
- பட்டியல் சாதியினரும் அருந்ததியினருக்கு 3% இட ஒதுக்கீடு.