இந்தியாவை நியுசிலாந்துடன் ஒப்பிடுவது சரியா???

இன்று சமூக வலைதளங்களில் அனைவரும் நியூசிலாந்தை புகழ்கின்றனர்,அதற்கு காரணம் நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடாக மாறியிருக்கிறது.அதற்கு காரணம் நிச்சயம் அந்த பிரதமரின் நடவடிக்கையும் மக்களின் ஒத்துழைப்புமே.7வாரங்கள் கடுமையாக ஊரடங்கை அமல்படுத்தினால் மக்களும் அதற்கு ஒத்துழைப்பை தந்தனர்.இதுவரை அங்கு 1500 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் (28 பேர் உயிரிழந்துள்ளனர்)இதனால் அவர்களை பாராட்டுவதில் தவறில்லை.


ஆனால் சிலர் இந்தியாவை இகழ்கின்றனர், அது ஏன் என்று தான் தெரியவில்லை.நியூசிலாந்து வெறும் 48.9 லட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டுள்ளது, சென்னையின் மக்கள் தொகை மட்டும் 70.9 லட்சம்(2011 கணெக்கெடுப்பின் படி), இந்தியாவின் மக்கள் தொகை 135.26கோடி, இருக்கையில் நியுசிலாந்தில் ஊரடங்கு விதிமுறைகளை நடைமுறை படுத்துவது எளிது.நாம் அவர்களைப் பார்த்து விட்டு நம் நாட்டை இகழ்வது மிகவும் தவறான கண்ணோட்டம் ஆகும்.

Post a Comment

Previous Post Next Post