புத்தரின் போதனைகள் பகுதி-2

புத்தரின் போதனைகள்



  1. வழி தவறிச் செல்லும் இரதம் போல பொங்கி வரும் கோபத்தை அடக்கியாள்பவனையே நான் சரியான சாரதி என்று கூறுவேன்.மற்றவர்கள் கடிவாள கயிற்றை வைத்திருப்பவர்களே.
  2. வயல்களுக்கு தீமை களைகள் மனித வர்க்கத்திற்கு தீமை ஆசை ஆதலால் ஆசையற்றவர்க்கு செய்யும் உதவி பெரும் பயனை அளிக்கும்.
  3. தீயோருடன் சேர் வேண்டாம் இழிந்தோருடன் இனங்க வேண்டாம் ஒழுக்க உள்ளவரோடு உறவாடுக.
  4. மெய், வாய்,மனம் ஆகிய மூன்றினாலும் பிறருக்கு துன்பம் செய்யாது ,இம்மூன்றிலும் அடக்கமுள்ளவனையே நான் பிராமணன் என்று கூறுவேன்.
  5. பிறப்பினால் ஒருவன் சண்டாளனாவதில்லை, பிறப்பினால் ஒருவன் பிராமணன் ஆவதில்லை,செயல்களால் தான் ஒருவன் சண்டாளனாகவும் ஆகிறான் பிராமனனாகவும் ஆகிறான்.
  6. ஒருவன் தன் ஆணவத்தின் உண்மையையும் தன் புலன்களின் போக்கையும் உணர்ந்து கொண்டால் நான் என்பதற்கு இடமில்லை என்று தெரிந்து கொள்வான்.
  7. மனிதன் மரணத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது.தப்பும் இடம் பரந்த வானத்திலும் இல்லை, ஆழ்ந்த கடலிலும் இல்லை, மலையின் குகைகளிலும் இல்லை.கனிவுற்ற கனிகள் விரைவில் கீழே விழுந்தது விடலாம், அதுபோல பிறவியுற்ற மனிதர்கள் எந்த நேரத்திலும் மரணமடைந்து விடக் கூடும்.
புத்தர் மட்டுமல்ல இதுவரை உலகில் தோன்றிய அனைத்து ஞானிகளும் கூறிய கருத்து ஒன்றே முடிந்தவரை அனைவரிடமும் அன்பு பாராட்டுங்கள்.நல்லது செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

Post a Comment

Previous Post Next Post