புத்தரின் போதனைகள்:
- உங்களுக்கு நீங்களே தீபங்களாக இருங்கள்.உங்களுக்கு நீங்களே புகலிடமாக இருங்கள்.வெளியில் எத்தகைய புகலிடைத்தையும் நாடாதீர்கள்
- கூரை செம்மையாக மேயப்பட்ட வீட்டினுள் மழைநீர் புகாது அதுபோல நன்னெறி பயிற்சி உள்ள மனதினுள் ஆசைகள் நுழைய முடியாது.
- ஒருவன் ஆயிரம் பேர் கொண்ட ஆயிரம் படைகளை அடக்கி வெற்றி கொள்கிறான்.ஒருவன் தன் மனதை அடக்கி வெற்றி கொள்கிறான்.இவர்களில் மனதை அடக்குபவனே மிகச் சிறந்தவன் என புத்தர் குறிப்பிடுகிறார்
- பாவம் பழுத்து பயனளிக்காத வரையில் மூடன் அவற்றை தேனை போல நினைப்பான்.ஆனால் அது பழுத்து பயனளிக்கையில் அவன் துயரை அடைகிறான்.
- திருட வேண்டாம் பறிக்கவும் வேண்டாம் ஒவ்வொருவரும் தம் உழைப்பின் பயனை அடைய உதவி செய்யுங்கள்.
- ஆணையிட்டு பேச வேண்டாம் நாகரிகமாகவும் நயம்படவும் பேசுங்கள்.
- பேராசை பட வேண்டாம் மற்ற மக்களின் இன்பங்களை கண்டு மகிழ்ச்சி அடையுங்கள்.
வெண்ணிமுத்து அய்யனார் கோவில் தினசரி மேற்கோள்கள்:
மனமே எல்லாம் நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆவீர்கள்