வெண்ணிமுத்து அய்யனார் துணை
தர்மம் என்றால் என்ன?
தர்மம் என்பது என்ன ஒருவருக்கு உணவு அளிப்பதா? ஒருவருக்கு உணவு அளிப்பது தர்மம் எனில் பசிக்காத ஒருவருக்கு உணவு அளிப்பது தர்மமாகுமா?
அப்படி எனில் தர்மம் என்றால் என்ன?அது எதைப் பொருத்து அமையும்? தர்மம் தேவையை பொருத்து அமையுமா? தேவைகள் இல்லாத மனிதனும் தான் உண்டா? ஒவ்வொருவருக்கும் ஒரு தேவைகள் உண்டு ஒருவருக்கு கார் தேவைப்படலாம் ஒருவருக்கு இருசக்கர வாகனமும் தேவைப்படலாம் அதை வாங்கி கொடுத்தால் அது தர்மத்தில் சேர்ந்துவிடுமா? உண்மையில் தர்மம் என்பது என்ன?
- உண்மையில் தர்மம் சூழலைப் பொருத்தே அமைகிறது.
- ஒரு மனிதனுக்கு தேவையான அடிப்படை தேவைகளான உண்ண உணவு ,உடுத்த உடை, அருந்த நீர், இருக்க இடம் இவற்றில் எது ஒரு மனிதனுக்கு இல்லையா அதை அவனுக்கு வழங்குவதே சிறந்த தர்மமாகும்.
- எந்த ஒரு தொழிலும் இல்லாத மனிதனுக்கு ஒரு தொழிலை உருவாக்கி தருவது சிறந்த தர்மமாகும்.
- ஒரு பொருளை கொடுப்பது மட்டுமே தர்மம் அல்ல.ஒருவருக்கு நல்ல ஆலோசனைகளையும் வழங்குவதும் தர்மம் ஆகும்.
- ஒருவனை தர்மத்தின் வழியில் தூண்டுவதும் தர்மமாகும்.
- ஒருவனது உள்ளத்தில் நற்ச்சிந்தனைகளை விதைப்பதே தர்மமாகும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா
Vennimuthuayyanar temple daily quotes
அதர்மம் வெல்வது போல் தெரிந்தாலும் இறுதியில் தர்மமே வெல்லும்