சாணக்கிய நீதி பகுதி-1

வெண்ணிமுத்து அய்யனார் துணை

சாணக்கிய நீதி:

சாணக்கியர் வாழ்வியல் குறித்த சில நீதி சாஸ்திரங்களை எழுதி உள்ளார்.அவற்றில் மிக பிரதானமானது சாணக்கிய நீதி.





  • எதிரே இனிக்க இனிக்க பேசி ரகசியமாக வஞ்சகம் செய்யும் நண்பனைக் தவிர்.அது விஷம் நிரம்பிய பானையில் மேலே மட்டும் பாலை ஊற்றி வைப்பதற்கு சமம்.
  • ஒன்றை திட்டமிடும் போதோ மனம் விரும்பியதை செய்யும் போதோ அதை வெளியில் யாரிடமும் கூற கூடாது.எடுத்த காரியம் முடிக்கும் வரை ரகசியம் காக்க வேண்டும்.
  • கரைபுரண்டு ஒடும் ஆற்றங்கரையில் உள்ள மரங்களும், இன்னொருவன் வீட்டில் இருக்கும் மனைவியும், அமைச்சர்கள் இல்லாத அரசனும் எளிதில் அழிந்து போவார்கள்.
  • அறநெறி அற்றவர்கள்,பாவிகள், தீயவர்கள் இவர்களுடன் கூட்டு சேர்ந்தவன் அறிவாளியாக இருந்தாலும் அழிந்து போவான்.
  • குயிலின் அழகு குரலில், பெண்ணிற்கு அழகு தன் கணவன் மீதுள்ள விசுவாசம்,துறவியின்  அழகு மன்னிக்கும் குணம்,அழகில்லாதவனுக்கு அழகு அவனது கல்வி அறிவாகும்.
  • இரவுக்கு ஒளியூட்ட ஒரு நிலவு போதும்.கற்று தேர்ந்த அறிவும் பண்பும் நிறைந்த ஒரு மகன் போதும் ஒரு குடும்பத்திற்கு ஒளியூட்ட.
  • ஐந்து வயது வரை உன் மகனை பாசத்தோடு வளர்த்தெடு, அடுத்த பத்தாண்டுகள் அவனிடம்  கடுமையாக நடந்துகொள், பதினாறு வயதிற்கு பிறகு அவனுக்கு தோழனாக இரு.
சாணக்கிய நீதி பகுதி 2 ல் சந்திப்போம்


தீதும் நன்றும் பிறர் தர வாரா

Vennimuthuayyanar temple daily quotes
ஒரு தவறு நடந்தால் பிழையை உங்களிடம் இருந்து தேடுங்கள் அதுவே புத்திசாலித்தனம்


Post a Comment

Previous Post Next Post