உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுவது எவ்வாறு?

உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுவது எவ்வாறு?



உணவு விடுதியில் தரப்படும் உணவு தரம் குறைவாகவும் வலை அதிகமாகவும் இருந்தால் உணவு பாதுகாப்பு ஆணையருக்கு எவ்வாறு புகார் தருவது என்று இப்போது காணலாம்.

அனுப்புநர்
உங்கள் பெயர்,
உங்கள் முகவரி,
உங்கள் முகவரி,
மாவட்டத்தின் பெயர்.

பெறுநர்

உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம்,
மாவட்டத்தின் பெயர்.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: தரமற்ற உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதல்-தொடர்பாக

வணக்கம் நான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு (உணவு விடுதியின் பெயர்) உணவு விடுதியில் மதிய உணவை உண்பதற்காக சென்றேன். முழு சாப்பாடு விலை நூறு என தகவல் பலகையில் எழுதி வைத்திருந்தனர். நான் சாப்பிட்டு விட்டு காசா அவரிடம் பணத்தை செலுத்தினால் அவர் முழு சாப்பாட்டின் விலை 130 எனக் கூறுகிறார். மேலும் கட்டாயப்படுத்தி என்னிடம் இருந்து ருபாய் 130யும்  பெற்றுவிட்டார்.

உணவு உண்ட சில மணி நேரத்தில் எனக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டது.மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்று கூறினர்.

ஆகவே தரமற்றதாகவும்,விலை கூடுதலாகவும் உண வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இடம்:

தேதி:

இப்படிக்கு,

உங்களுடைய பெயர்.

உறையின் மேல் எழுதவேண்டிய முகவரி;

உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

மாவட்டத்தின் பெயர்.

2 Comments

Previous Post Next Post