இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சடம்பகுதி-2


இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்தம் ஆறு:
  1. N.கோபால்சாமி ஐயங்கார்
  2. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார்.
  3. டாக்டர் K.M.முன்ஷி.
  4. சையத் அகமத் சாதுல்லாஹ்.
  5. N.மாதவராய்.
  6. டி.டி.கிருஷ்ணமாச்சாரி.
மாதவராய் பி.எல்.மிட்டர் பதவி விலகிய பிறகு சேர்க்கப்பட்டார். 
கிருஷ்ணமாச்சாரி டி.பி.கெய்தான் இறந்த பிறகு சேர்க்கப்பட்டார்.

  • அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு 26/11/1949.
  • 1929இல் லாகூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் படி 26/01/1930 இல் முதல் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 26/01/1950 இல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
  • அரசியல் நிர்ணய சபையின் கடைசி கூட்டம் நடைபெற்ற நாள் 24/01/1950.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு 26/01/1950.
  • அரசியல் நிர்ணய சபையால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்டபோது கையெழுத்திட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 289.
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் தற்போது 12 அட்டவணை 25 பாகம் 465 சாரத்தை கொண்டுள்ளது.

நியமிக்கப்பட்ட குழுக்களும் அதன் தலைவர்களும்:

சட்ட வரைவு சிறப்பு குழு-அல்லாடி கிருஷ்ணசாமி ஐயங்கார்.

மத்திய அதிகார குழு-நேரு.

இந்திய அரசியலமைப்பு குழு-நேரு

தேசிய கொடி குழு ஜெ.பி.கிருபாலினி

மாநில மாகாண அரசியல் அமைப்பு குழு சர்தார் வல்லபாய் பட்டேல்.

அடிப்படை உறுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் குழு -சர்தார் வல்லபாய் படேல்.

Post a Comment

Previous Post Next Post