அய்யனார் பற்றிய கேள்வியும் பதிலும்


கேள்வி:

வெண்ணிமுத்து என்றால் என்ன ? இவர் எப்படி இலுப்பைக்குளம் வந்தார் ? காஞ்சிரங்குளம் அருகில் எப்படி கோவில் கொண்டுள்ளார் ? மூலவராக எங்குள்ளார் ?

பதில்:

1)அய்யனார் வரலாறு:

அய்யனார் சிவபெருமான், நாராயணர் சக்திகள் ஒன்று சேர்ந்த அம்சம்.உலகில் தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்ட உதவி செய்ய வந்தவர்.
அய்யனார் என்ற சொல் அய்யன் என்ற சொல்லில் இருந்து திரிந்து வந்தது.அய்யன் என்றால் வணக்கத்துக்கு உரியவர் என்று பொருள்.

 

  எம்.இலுப்பைகுளம்

2) வெண்ணிமுத்து அய்யனார் பெயர் விளக்கம்:

வெண்மையான முத்து பார்க்க எவ்வளவு அழகாக இருக்குமோ அதுபோல் பார்க்க மிகவும் அழகாக இருப்பதால் வெண்ணிமுத்து அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.
(பாலாபிஷேகம், தயிர், திருநீறு போன்ற வெண்மையான பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யும் போது உண்மையில் அவருடைய தோற்றம் அழகாக தெரியும்)

3) காஞ்சிரங்குளம் கிராம மக்கள் 1990 முன்பு வரை இலுப்பைக்குளம் வந்து தான் சாமி கும்பிட்டனர்.இலுப்பைகுளம் கிராம் மக்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  1990 பிறகு காஞ்சிரங்குளத்திலேயே தாங்கள் வழிபட கோவிலை ஏற்படுத்தி கொண்டனர்.

4) சிவன் எங்கு மூலவராக உள்ளார் என்று கேட்டாள் நம்மால் எவ்வாறு கூறமுடியாதோ அதுபோல அய்யன் எங்கு மூலவராக உள்ளார் என்பதையும் கூற முடியாது.தமிழகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார்

ஆனால் வெண்ணிமுத்து அய்யனாராக இலுப்பைகுளத்தில் மூலவராக உள்ளார்.
மற்ற அய்யனார் தளத்திற்கு இல்லாத சிறப்பு இலுப்பைகுளத்தில் உள்ள வெண்ணிமுத்து அய்யனாருக்கு உள்ளது. இங்கு அய்யனார் பஞ்சபூத தத்துவ (நாக வடிவம்) அடிப்படையில் உள்ளார்.

Post a Comment

Previous Post Next Post