ஒற்றை அரசாங்க முறை

வெண்ணிமுத்து அய்யனார் துணை
 

ஒற்றை அரசாங்க முறை:



  • ஒற்றை அரசாங்க முறையில் மைய அரசில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு இருக்கும்.இது நிர்வாகம் சீராக நடப்பதற்கான ஏற்பாடாகும்.இந்த அமைப்புகள் தனி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.
  • ஒற்றை அரசாங்க முறைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், இலங்கை நாடுகள் உதாரணங்கள் ஆகும்.
C.Fஸ்ட்ராங் இரண்டு முக்கியமான தகுதிகள் பற்றி குறிப்பிடுகிறார்.அவை
  1. மத்திய அரசாங்கத்தின் உயரிய தன்மை.
  2. இறையாண்மை அதிகாரம் உடைய இதர அமைப்புகள் எதுவுமில்லாமல் இருப்பது.

நிறைகள்:

  • ஒற்றுமை,ஒரே மாதிரியான சட்ட முறை கொள்கை மற்றும் நிர்வாகம்.
  • ஆட்சி அதிகாரம் பொறுப்பு வகிப்பவர்களிடையே சச்சரவுகள் இல்லாதத் தன்மை.
  • செலவு குறைவான அமைப்பு.
  • அரசியல் சட்டத்தை எளிதில் மாற்றக்கூடிய நிலை.
  • முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு அது விரைவாக நடைமுறைக்கு வரும்.

குறைகள்:

  • அதிகார குவிப்பு மத்திய அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்கு ஏதுவாகும்.
  • அளவில் பெரிய நாடுகளுக்கு ஒத்துவராது.
  • மத்திய அரசாங்கம் பல சிக்கலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
  • பிரதேச அலுவல்களை கவனிப்பதற்கு நேரம் இல்லாமல் போகும்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா ‌

Post a Comment

Previous Post Next Post