இந்திய அரசு மேற்கொண்ட முக்கிய அரசியல் அமைப்பு சட்டத் திருத்தங்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
முதல் அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் 1951:
- சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினரின் மேம்பாட்டிற்காக அரசு புதிய கொள்கைகளை வகுக்க வழி வகை செய்தது.
- புதிதாக 9வது அட்டவணை உருவாக்கப்பட்டது.இந்த அட்டவணையில் சேர்க்கப்படும் சட்டங்களை நீதிமன்றம் விசாரணைக்கு(judicial review) உட்படுத்த இயலாது
- சொத்துக்களை சம்பாதித்து கையகப்படுத்துதல் தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டன.
7 வது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் 1956:
- ஏற்கனவே இருந்த மாநிலங்களின் 4 வகைப்பாடுகளை(பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4)அழித்து அவற்றை 14 மாநிலங்களாக 6 யூனியன் பிரதேசங்களாகவும் மறு மதிப்பீடு செய்தது.
- உயர் நீதிமன்றத்தின் நீதி எல்லையை யூனியன் பிரதேசங்கள் வரையில் விரிவுபடுத்தியது.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒரு பொது நீதிமன்றம் (common high court) அமைக்க வித்திட்டது.
- கூடுதல் நீதிபதிகள் நியமனம் செய்வதற்கு வழி வகுத்தது.
12 வது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் 1962:
- டாமன் டையூ கோவா போன்ற பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தது.
14 வது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் 1962:
- புதுச்சேரியை இந்தியாவுடன் இணைத்தது.
15 வது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் 1963:
உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்தியது.
Tags:
TNPSC