சமத்துவ உரிமை (சரத்து 14-18)


சரத்து-14(சட்டத்தின் முன் சமம்):

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தாக்கம் இங்கிலாந்தில் பின்பற்றப்பட்ட மரபில் இருந்து வந்ததாகும்.

  • எந்த நபருக்கும் ஆதரவாக சிறப்பு சலுகைகளை மறுத்தல்.
  • சட்டத்தின் முன் எந்த ஒரு தனி நபருக்கும் எவ்வித சலுகைகளும் காட்டப்படாது.
  • சட்டத்திற்கு மேல் எதுவும் இல்லை.
அனைவருக்கும் சமமான பாதுகாப்புச் சட்டம்:

இக்கருத்து அமெரிக்க அரசியல் அமைப்பிலிருந்து பெறப்பட்டதாகும்.

  •  சட்டத்தின் வாயிலாக ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப சூழ்நிலையின் அடிப்படையில் சமமாக நடத்தப்படுவர். 
  • சமநிலையில் உள்ளவர்களுக்கு சட்டம் பாதுகாப்பை வழங்கும்.
  • எந்தப் பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக கருதப்பட வேண்டும்.
சரத்து - 15:
  • அரசு எந்தக் குடிமகனையும் அவனுடைய மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைக் காரணமாகக் காண்பித்து, அவனைப் பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது.
  • எந்தக் குடிமகனும் அவன் சார்ந்துள்ள மதம், இனம், சாதி, பால், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் கடை, பொது ஒய்வு விடுதிகள், உணவு விடுதிகள் மற்றும் பொதுவான பொழுதுபோக்கு இடங்களில் நுழையும் போதும் தடைப்படுத்தவோ அல்லது நிபந்தனை விதிக்கப்படவோக் கூடாது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கானச் சிறப்புச் சட்டங்கள் இயற்றுவதிலிருந்து அரசினை இந்த சரத்தில் உள்ள எதுவும் தடுக்காது.
  • அரசு, சமுதாயத்தில் மற்றும் கல்வியில் பின் தங்கி உள்ள வகுப்பினர்களுக்கு அல்லது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தனிச் சலுகைகள் அளித்து, அவர்களும் சமுதாயத்தில் முன்னேற்றமடைய தனிச்சிறப்புச் சட்டங்கள் இயற்றுவதற்கு அரசினை எதுவும் தடுக்காது.
சரத்து 16:

  • அரசின் கீழுள்ள எந்த அலுவலகத்திலும் பணி அல்லது நியமனம் குறித்த விவகாரங்களில் எல்லா குடிமகன்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
  • இந்தியாவின் எப்பகுதியில் வாழ்ந்து வருவதாக இருப்பினும் வேலைவாய்ப்புகளில் அரசு சம வாய்ப்பு அளிக்க மறுக்கக்கூடாது.
  • அரசுப் பணிகளை திறமையாக செய்வதற்குரிய தகுதிகளை நினைப்பது சரக்கு 16 க்கு எதிராக அமையாது.

Post a Comment

Previous Post Next Post