பட்ஜெட் தாக்கல் செய்தல்


  • சரத்து 112 பட்ஜெட் பற்றி கூறுகிறது. இங்கு இது ஆண்டு நிதி நிலை அறிக்கை என குறிப்பிடப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பில் பட்ஜெட் (Budget) என்ற சொல் எங்கும் இடம்பெறவில்லை.

  • குடியரசுத் தலைவர் ஒவ்வொரு நிதி ஆண்டிற்கும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) உண்டான, வருடாந்திர நிதி அறிக்கையை பாராளுமன்றத்தில் இரு அவைகளின் முன்பும் வைக்க வேண்டும். 
  • இவ்வறிக்கையானது வரவிருக்கும் திட்டமிடப்பட்ட வருமானம் மற்றும் செலவினங்களைக் குறித்த விவரங்களைத் தருகிறது. 
இதில் திட்டமிடப்பட்ட செலவினங்களானது இரண்டு தனியான தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டு உள்ளது.

  1.  இந்தியாவின் திரட்டு நிதியிலிருந்து செய்யப்பட வேண்டிய செலவினங்கள்.
  2. இந்தியத் திரட்டு நிதியிலிருந்து செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ள பிற செலவினங்கள்.
கீழ்வரும் இனங்களுக்காக ஒருங்கிணைப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளும் செலவுகளுக்கு பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடத்தலாம். ஆனால் வாக்கெடுப்பு நடத்த முடியாது. அவைகளாவன :

  • குடியரசுத் தலைவரின் ஊதியம் மற்றும் அவரின் அலுவலக செலவுகள்.
  • மாநிலங்களவை தலைவர் மற்றும் துணை தலைவர், மக்களவை சபாநாயகர்,துணை சபாநாயகர் இவர்களின் ஊதியம் மற்றும் படிகள்.
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் மற்றும் படிகள் மேலும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வூதியம், மைய அரசின் தலைமை கணக்கர் மற்றும் தணிக்கையாளர், (CAG) மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள்.

பட்ஜெட்டானது பின்வரும் நிலைகளை கடந்து செல்லும்.

1. பட்ஜெட் அறிமுகம் :

  • அக்வொர்த் கமிட்டியின் பரிந்துரையின்படி இரயில்வே பட்ஜெட்டானது பொது பட்ஜெட்டிலிருந்து 1921-ல் தனியாக பிரிக்கப்பட்டது.
  • இரயில்வே பட்ஜெட் (பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரம்).
  • பொது பட்ஜெட் (பிப்ரவரி மாதத்தின் கடைசி வேளை நாள்).
பிபேக் தேப்ராய் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2017 முதல் இரயில்வே பட்ஜெட்டானது பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது.

2. பொது விவாதங்கள் :

பட்ஜெட் மீது பொது விவாதங்கள் 3-லிருந்து 4 நாள்களுக்கு நடைபெறும்.

3. நிர்வாக கமிட்டிகளின் சோதனை:

பொது விவாதங்கள் முடிந்த பின்பு அவையானது 3 அல்லது 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படும். இந்த இடைவெளியில் பாராளுமன்றத்தின் பல்வேறு துணைக்குழுக்கள் ஒவ்வொரு அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதும் சோதனை மற்றும் விவாதங்களை மேற்கொண்டு அதற்கான அறிக்கைகளை தயார் செய்யும்.

4. மானியக் கோரிக்கை மீது ஓட்டெடுப்பு:

  • பட்ஜெட்டில் உள்ளடக்கிய செலவு மதிப்பீடுகள் மற்றும் மானியங்கள் மீது மக்களவை மேற்கொள்ளும் வாக்கெடுப்புகள். ஒவ்வொரு அமைச்சரவை வாரியாக மானியக் கோரிக்கைகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். மேலும் பெரிய பணிகளுக்கு தனியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கும்.
  • அரசியலமைப்பு ஒவ்வொரு கோரிக்கைகளுக்கும் முதலில் மொத்த மானிய மதிப்பீடுகளும் இரண்டாவது ஒவ்வொக இனத்திற்கும் தனித்தனி மானிய மதிப்பீடுகளும் இடம் பெற்றிருக்கும்.
  •  மானியக் கோரிக்கை கோரிக்கை மீது மக்களவை மட்டுதே வாக்களிக்கும் சிறப்பு உரிமையை பெற்றுள் மாநிலங்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை மானியக் கோரிக்கை மீது விவாதங்கள் நடத்த 26-நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மசோதாக்கள் வாரியாக விவாதித்து மானியங்களை குறைப்பதற்கு தீர்மானங்கள் கொண்டு வருவர், இத்தகைய தீர்மானங்கள் வெட்டுத் தீர்மானங்கள் என அழைக்கப்படுகின்றன.

Post a Comment

Previous Post Next Post