முக்கிய வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்கள்


யானைகள் பாதுகாப்புத்திட்டம்:

பிப்ரவரி 1992-ல் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டமானது, அதிகளவு காட்டு யானைகள் உள்ள மாநிலங்களுக்கு உதவி செல்கின்றது. மேலும் அவற்றின் இயற்கை வாழிடங்களிலேயே அவை உயிர்வாழ்வதை உறுத செய்தல் போன்றவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது.

வன விலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972:

  • இச்சட்டத்தினுள் 6 அட்டவணை பட்டியல்கள் உள்ளது. ஒவ்வொரு அட்டவணை உயிரினங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மாறுபடும்.
புலிகள் பாதுகாப்புத்திட்டம்-1973-ல் மத்திய அரசின் நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தின் நோக்கம் பின்வருமாறு.

  1. அறிவியல், பொருளாதார, அழகியல், பண்பாட்டு மற்றும் சூழலியல் மதிப்பிற்காக புலிகளின் எண்ணிக்கையையும் பாதுகாப்பையும் உறுதி செய்தல்.
  2. மக்களின் நன்மைக்காவும், கல்விக்காகவும், சந்தோஷத்திற்காகவும் உயிரியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தேசிய பாரம்பரியங்களாக கருதி பாதுகாத்தல்.
  3. தற்போது வரை இந்தியாவில் 50 புலிகள் பாதுகாப்பிடங்கள் உள்ளது.

இந்திய காண்டாமிருகம் பார்வைத் திட்டம் 2020:

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. மேலும் போடோ தன்னாட் கவுன்சில் மற்றம் அஸ்ஸாம் மாநிலம் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகிறது.

இத்திட்டத்தின் நோக்கம் 2020-ற்குள் அஸ்ஸாமில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை 2000-இ இருந்து 3000மாக அதிகரித்தல். 7 பாதுகாக்கப்பட் பகுதிகளில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகத்தின் பாதுகாப்பு மற்றும் வாழிடத்தை உறுதி செய்தல்.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA):

2006-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தமானது சட்டரீதியான இவ்வமைப்பை உருவாக்கியது. இந்த ஆணையம் புலிகளை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உறுதுணையாக உள்ளது.

பனிச்சிறுத்தை பாதுகாப்புத்திட்டம் - ஜனவரி-2009:

இமயமலையில் உயரமான பகுதிகளிலுள் வனவிலங்குகளை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.

Post a Comment

Previous Post Next Post