மீன் எண்ணெய்:
- மீனின கல்லீரல், வைட்டமின் A மற்றும் D ஆகியவற்றைக் கொண்டது. (எ.கா) சுறா கல்லீரல் எண்ணெய், காட் கல்லீரல் எண்ணெய். இது ரிக்கட்ஸ் சீரோப்தால்மியா, குறைப்பார்வை, மேலும் கண், தோல், கோழைப்படலம், முள்ளெலும்புகளில் தோன்றும் உணவூட்டக் குறைபாட்டு நோய் வராமல் தடுக்கவும், மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் பற்கள் மற்றும் எலும்புகளின் வர்ச்சியை உறுதி செய்கிறது.
மீன் உடல் எண்ணெய்:
உடலின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் இது பிரித்தெடுக்கப்படுகிறது.
சார்டைன் போன்ற உணவுச் சிறப்பு பெறாத சிறு மீன்களும், மீன் பதப்படுத்துதலில் ஒதுக்கப்படும் மீன் கழிவுகளும் இந்த எண்ணெய்த் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணெய்
- குறைந்த விலை சோப்புகள், வர்ணங்கள், மெருகு எண்ணெய் (வார்னிஷ்).
- தோல் பதப்படுத்துதல்.
- ஸ்டீல் மற்றும் வேதியப்பொருள் தொழிற்சாலைகள்.
- உயவுப்பொருள் மற்றும் மெழுகுவர்த்தி தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது.
மீன் தீவனம்:
- மீன் கழிவுகளை வேகவைத்து, அரைத்து காய வைக்கப்பட்டு மீன் தீவனம்' செய்யப்படுகிறது.
- இது கோழி மற்றும் விலங்குகளுக்குச் சிறந்த தீவனமாகிறது. இது முட்டை மற்றும் பால் உற்பத்தியைப் பெருக்குகிறது.
மீன் மாவு:
மிகச் சிறந்த புரத உணவாக இது விளங்குகிறது. கோதுமை, சோளம் போன்றவற்றுடன் கலக்கப்பட்டு கேக்குகள், ரொட்டி, பிஸ்கெட்டுகள், சூப்புகள், இனிப்பு வகைகள் போன்ற உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் உரம் மற்றும் கொவனோ:
மீன் பண்டங்கள் தயாரிப்பில் வெளியேற்றப்படும் கழிவுகள் மீன் உரமாகப் பயன்படுகின்றன. மீன் எண்ணெய்த் தயாரிப்பில் கழிவாகக் கிடைக்கும் புண்ணாக்கு மிகச்சிறந்த இயற்கை உரமாகிறது.
மீன் கோந்து:
உணவுப்பொருள் தயாரிப்பில் எஞ்சிய எலும்பு, தோல், துடுப்பு போன்ற பாகங்களிலிருந்து மீன் கோந்து தயாரிக்கப்படுகிறது. இது நல்லதொரு ஒட்டு பசையாகப் பயன்படுகிறது.
இஸ்ஸிங்கிளாஸ் (Isinglass):
சில வகை மீன்களில் காற்றுப்பைகளில் மிகச்சிறந்த கொலஜன் எனப்படும் பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது.
இப்பொருள் இஸ்ஸிங்கிளாஸ் தயாரிக்கப் பயன்படுகிறது.ஒயின், பீர், வினிகர் போன்றவற்றைத் தெளிவுபடுத்துதலில் பயன்படுத்தப்படுகிறது.பிளாஸ்டர்கள், சிறப்பு சிமெண்ட்டுகள் ஆகியவை தயாரிப்பில் இது பயன்படுகின்றது.
மீன் தோல்:
சுறா போன்ற மீன்களின் பதப்படுத்தப்பட்ட தோல் கைப்பை, செருப்பு, பணப்பை போன்றவைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது.
ஓமேகா கொழுப்பு அமிலம்:
லினோலிநிக் அமிலம், டெக்கோசஹெக்சாயினோயிக் (DHA) அமிலம், எயிகோசபெனடாயீனோயிக் அமிலம் (EPA) போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மீன் உணவில் மட்டும் காணப்படுகின்றன.
குழந்தைகளில் புத்தி கூர்மையையும், பெரியோர்களுக்கு நினைவாற்றலையும் அதிகரிக்க வல்லது. கருவளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. இதயம் நல்ல முறையில் இயங்கவும், இன்சுலின் வேலைத்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றது. மூட்டுவாத நோய் குறைவதற்கு இக்கொழுப்பு அமிலங்கள் மிகவும் அவசியமாகின்றன. இத்தகைய கொழுப்பு அமிலங்கள் மீன்களில் காணப்படுவது, மற்ற மாமிசங்களில் இல்லாத சிறப்பு அம்சமாகும். இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வண்ண மீன் வளர்ப்பு:
- அழகுக்காகவும், நளினமான அசைவுகளைக் கண்டு மகிழவும் மட்டுமே அலங்கார மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
- உடல் நோயுற்றோர், நோயிலிருந்து தேறுவோர் மன அமைதி பெறுகின்றனர்.
- காண்பவர் அனைவரும் மனமகிழ்ச்சி அடைகின்றனர்.
கொவனோ (பறவை எச்சக் குவியல்):
மீன் உண்ணும் கேனட், கார்மோரன்ட், பெலிக்கன் போன்ற கடல் பறவைகளின் எச்சக் குவியல் கொவனோ' எனப்படும்.
பெரு, கலிபோர்னியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளைச் சுற்றிலும் காணப்படும் தீவுகளில் இப்பறவைகளைக் காணலாம்.
விவசாய உற்பத்தியில் இவற்றின் பங்கு தெரிந்த பின்புதான் மீனில் உள்ள நைட்ரஜன் மற்றும் பாஸ்பாரிக் அமிலத்தின் சிறப்பு உணரப்பட்டது. சிறந்த கொவனோக் குவியல்கள் மழையற்றபெரு கடற்தீவுகளில் காணலாம்.
தெரிந்து கொள்வோம்:
இந்தியாவில் சிறந்த மீன் காட்சியகம் மும்பையில் தாராப்பூரில் அமைந்துள்ளது.
Tags:
TNPSC