எடப்பாடி கே.பழனிச்சாமியின் சாதனைகள்



  • அரசு நடத்தும் 500 மதுபானக் கடைகளை மூடியது.
  • 2017-ஆம் ஆண்டில் நீரா பானத்திற்கு அனுமதி.
  • மாநிலத்திலுள்ள நீர்நிலைகளை மீட்க 2017-ஆம் ஆண்டில் குடிமராமத்து திட்டம்.
  • மீனவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.850 மில்லியன் செலவில் 5000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.
  • டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நலதிட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவி ரூ.12,000-லிருந்து ரூ.18,000-ஆக உயர்த்துதல்.
  • தமிழ்நாட்டிலுள்ள வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர வேலையின்மை படித்தொகையை இரட்டிப்பாக்குதல்.10-ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு மாதத்திற்கு ரூபாய் ரூபாய் 200.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 400, மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூபாய் 600.
  • 2018 ஆம் ஆண்டில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம்.
  • விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியத்தை ரூ.1000 ரூ.13,000 ஆகவும் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.500 லிருந்து ரூ.6500 ஆகவும் உயர்த்துதல்.
  • ஜனவரி 2019 முதல் நெகிழிக்கு தடை விதித்தல்.
  • 2019 ஆம் ஆண்டில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்.
  • உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு மாநாட்டின் இரண்டாவது பதிப்பு ரூபாய் 32 ஆயிரத்து 206 கோடி மதிப்புள்ள முதலீடுகளை ஈர்க்கவும் 10 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நடத்தப்பட்டது.
  • மாநில போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்களுக்கு உதவுவதற்காக பிப்ரவரி 22 2019 இல் மெய்நிகர் கற்றல் வலைதளமாக www.tamilnaducareerservices.gov.in-னை அறிமுகப்படுத்தியது.
  • மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் சுமார் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 2000 ஒருமுறை உதவிப் பணமாக வழங்குமாறு அறிவித்தது.
  • 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.
  • 2019 ஆம் ஆண்டில் அம்மா உடற்பயிற்சி கூடம்.
  • நிர்வாக வசதிக்காக ஆறு புதிய மாவட்டங்களை (செங்கல்பட்டு,கள்ளக்குறிச்சி,தென்காசி,திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை) உருவாக்கியது.
  • ஆசியாவிலேயே மிகப்பெரிய அதிநவீன கால்நடை பூங்கா அமைத்தது.
  • காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.
  • 2020 ஆம் ஆண்டில் அம்மா மினி கிளினிக் திட்டம்.
  • ஜனவரி 28ல் கொண்டாடப்படும் தைப்பூசத்தற்கு பொதுவிடுமுறை அறிவித்தது.

Post a Comment

Previous Post Next Post