பழைய கற்காலம் (கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு):
- இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
- இவ்விடங்கள் பெரும்பாலும் நீர் நிலைகளுக்கு அருகாமையிலேயே உள்ளன. பழைய கற்கால மக்கள் வசித்த பாறை இடுக்குகளும், குகைகளும் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. சில இடங்களில் அவர்கள் இலைகளால் வேயப்பட்ட குடிசைகளிலும் வாழ்ந்தனர்.
இந்தியாவில் காணப்படும் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் வருமாறு:
- வடமேற்கு இந்தியாவில் சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி.
- வட இந்தியாவில் சிவாலிக் குன்றுகள்.
- மத்தியப் பிரதேசத்தில் சோன் ஆற்றுப்படுகை, பிம்பேட்கா, மஹேஸ்வா.
- கர்நாடகத்தில் பாகல்கோட்.
- நர்மதைப் பள்ளத்தாக்கில் ஆதம்கார் குன்று.
- ஆந்திரப் பிரதேசத்தில் கர்நூல் குகைகள், ரேணிகுண்டா.
- தமிழ்நாட்டில் வடமதுரை, சென்னைக்கருகிலுள்ள அத்திரம்பாக்கம், பல்லாவரம், காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர்.
- இராஜஸ்தானில் பாயும் லூனி ஆற்றுச்சமவெளி.
- பழைய கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும், உண்ணக் கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடிக் கொண்டனர்.
- எனவே, இவர்களை உணவை சேகரிப்போர் என்று அழைக்கின்றனர்.
- விலங்குகளை வேட்டையாடுவதற்கு கற்கருவிகளையே இந்த மக்கள் பயன்படுத்தினர்.
- கையளவு கற்கருவி மற்றும் உடைந்த கூழாங்கற்களே இவர்களது ஆயுதங்களாகும்.
- கற்கருவிகள், கெட்டியான குவாட்சைட் எனப்படும் பாறைக்கற்களாலானவை.
- ஆற்றுப் படுகைகளில் பெரிய கூழாங்கற்கள் கிடைத்தன.
- பிம்பிட்கா போன்ற ஒருசில பழைய கற்கால இடங்களில் இவர்களது ஓவியங்களும் காணப்படுகின்றன. பழைய கற்காலம் என்பது கி.மு.10,000 ஆண்டுக்கு முற்பட்டதாகும்.