இடைக்கற்காலம்


  • மனிதகுல வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை இடைக்கற்காலம் என்று அழைக்கிறோம்.
  • இது சுமார் கி.மு.10000 முதல் கி.மு.6000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாகும்.
  • பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்களை இக்கால வரலாறு எடுத்துரைக்கிறது.
  • இடைக்கற்கால சின்னங்கள், குஜராத்தில் லாங்கன்ச், மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் சில இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
  • பாறைக் குகைகளில் காணப்படும் ஓவியங்களிலிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது. 
  • இடைக் கற்காலத்தில் வேறுவகையிலான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
  • மிகச் சிறிய கற்களாலான இவை பொரும்பாலும் அதிகபட்சம் ஐந்து சென்டிமீட்டர் அளவையுடையதாகும். எனவே, இவற்றை நுண்கற்கருவி அல்லது மைக்ரோலித் என்று அழைக்கிறோம். 
  • வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகியன தொடர்ந்தன. பெரிய விலங்குகளுக்குப் பதில் சிறிய விளங்குகளை வேட்டையாடுவதிலும், மீன் பிடிப்பதிலும் இக்கால மக்கள் அதிக கவனம் செலுத்தினர். 
  • வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினர். மேலும், ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி வாழும் போக்கும் வளரத் தொடங்கியது.
  • ஆகையால் பிராணிகளை வளர்த்தல், தோட்டப் பயிரிடுதல், தொடக்கக்கால வேளாண்மை போன்ற நடவடிக்கைகள் இக்காலத்தில் தொடங்கின. நாய், மான், பன்றி, தீக்கோழி போன்ற விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளமை இதற்குச் சான்றாகும்.
  • ஒரு சில இடங்களில் நுண்கற்கருவிகள் மற்றும் மேலோடுகளுடன் சேர்த்து சவ அடக்கம் செய்யப்பட்டதற்கானச் சான்றுகளும் கிடைத்துள்ளன.

Post a Comment

Previous Post Next Post