ஹரப்பா பண்பாட்டின் சில முக்கிய நகரங்கள்


ஹரப்பா (HARAPPA):

  • முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டது. 
  • புதையுண்ட நகரம் என்று அழைக்கப்படுகிறது. 
  • அகழ்வராய்சியில் ஈடுபட்டவர் - தயா ராம் சாஹ்னி - 1921.
  • ராவி (Ravi) நதிக்கனாவில் மாண்ட்கோமெரி மாவட்டத்தில் (தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில்) அமைந்துள்ளது.
முக்கிய கண்டுபிடிப்புகள்: 
இரண்டு வரிசையில் அமைந்த களஞ்சியங்கள், வேலையாட்களுக்கான தங்குமிடம், மனித உள்ளமைப்பு காட்டப்பட்ட கற்கள். நாயினால் தாக்கப்படுகின்ற மான், நிய மாட்டு வண்டி, கல்லறை ஆர்-37 முதலியன.

மொகஞ்சாதாரோ (MOHENJODERO):

  • இறந்தவர்களின் மேடு என்று அழைக்கப்படுகிறது. 
  • ஆர்.டி. பானர்ஜியால் 1922-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 
  • சிந்து நதிக்கரையில் லர்க்கனா மாவட்டத்தில் (தற்போதைய பாகிஸ்தான்) அமைந்துள்ளது. 
  • முக்கிய கண்டுபிடிப்புகள்: ஒரு கல்லூரி, பெரிய நீச்சல் குளம், பெரிய தானியக் களஞ்சியம், நெய்யப்பட்ட பருத்தி ஆடைகளின் பகுதி, வெண்கலத்தால் ஆன நடன மங்கையின் சிலை, கூட்டங்களுக்கான சபை, பசுபதி மகாதேவரின் முத்திரை மற்றும் மதகுருவின் சிலை. 
  • வெண்கலத்தால் ஆன எருமை முதலியன. 
  • வெள்ளதால் அழிந்திருப்பதாக எண்ணப்படுகிறது.

சங்குதாரோ (CHANHUDARO):

  • கோட்டைகளற்ற ஒரே ஹரப்பா கலாச்சாரம்.
  •  N.G.மஜூம்தார் அவர்களால் 1931-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 
  • சிந்து நதிக்கரையில் அமைந்துள்ளது. 
  • மணிகள் விற்கும் கடை, மைப்புட்டி, நாயின் கால்தடம் மற்றும் பூனையை விரட்டும் நாய் போன்றவை கிடைத்தன.

லோத்தல் (LOTHAL):

  • எஸ்.ஆர்.ராவ் அவர்களால் 1953-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 
  • குஜராத் மாநிலத்தில் உள்ள காம்பே வளைகுடாவில் பொகோவா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 
  • கண்டுபிடிப்புகள்: முதல் செற்கை துறைமுகம், மணிகள் செய்யும் தொழிற்சாலை, அரிசியின் உமி, பலிபீடம், சதுரங்கம் விளையாட்டு முதலியன.

தோலாவிரா (DHOLAVIRA):

  • சமீபத்தில் தோண்டப்பட்டது. கண்டுபிடித்ததில் மிகப்பெரியதாக கருதப்படுகிறது. 
  • ஆர்.எஸ். பிஸ்த் (R.S. Bisht) (1985-90) அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. 
  • கட்ச் வளைகுடாவில் குஜராத்தில் அமைந்துள்ளது.
  •  ஏழு வகையான கலாச்சார வளர்ச்சிகள் உள்ளது. நகரம் மூன்று பகுதிகளை உடையது. 
  • தனித்துவமான நீர் மேலாண்மை தொழில்நுட்பத்தை இவ்விடம் கொண்டுள்ளது.

சுர்கோட்டடா (SURKOTADA):

  • 1964 ஆம் ஆண்டு ஜெ.பி. ஜோஷியால் கண்டுபிடிக்கப்பட்டது. 
  • இங்கு மணிகள் விற்கும் கடைகள் இருந்தன. 
  • இது ஹரப்பா மற்றும் பாபிலோனிக்கும் இடையே உள்ள வர்த்தக மையமாக செயல்பட்டிருக்கிறது.
கலிபங்கன் (KALIBANGAN):

  • கலிபங்கன் என்பதற்கு கருப்பு வளையல் என்று அர்த்தம்.
  • பி.பி.லால் மற்றும் பி.கே.தாபர் ஆகியோரால் 1960 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 
  • இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கியமான இடம் உழுசால் நிலம் ஆகும். 
  • லோத்தலுக்கு அடுத்து இரண்டாவதாக இப்பகுதி கீழ் நகரப் பகுதியில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. 
  • ஒட்டகத்தின் எலும்பு இங்கு கண்டறியப்பட்டுள்ளது. 
  • இரண்டு வகையான புதைக்கும் வழக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

பனவாலி (BANAWALI):

  • முன் ஹரப்பா மற்றும் ஹரப்பா கலாச்சாரம்.
  • ஆர்.எஸ். பிஸ்த் (R.S. Bisht) அவர்களால் 1974-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 
  • ஹரியானாவில் ஹஸ்ஸார் மாவட்டத்தில் உள்ளது. 
  • பார்லி, குதிரையின் எலும்புகள், மணிகள் விற்கும் கடைகள் முதலியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post