காங்கேயம்:
இவ்வகை இனங்கள் கொங்கு மற்றும் கொங்குநாடு என்று அழைக்கப்படுகின்றன. இவைகாங்கேயத்தில் உருவாகியவை. தாராபுரம், பெருந்துறை, ஈரோடு, பவானி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் காணப்படுகின்றன. பாளையங்கோட்டையைச் சேர்ந்த மறைந்த பயில்வான் திரு. ந. நல்லதம்பி சர்காரி மான்ராடியா என்பவரின் சீரிய முயற்சியால் இவ்வினங்கள் உருவாக்கப்பட்டவையாகும்.
பர்கூர் மாடுகள்:
ஈரோடு மாவட்டத்தில் பவானி தாலுகாவிலுள்ள பர்கூர் மலைப் பகுதிகளில் இவ்வினங்கள் காணப்படுகின்றன. இவ்வினங்களைச் சார்ந்த மாடுகள் கரடுமுரடான பகுதிகளை உழுது சரி செய்யும் வேலைகளைச் செய்ய உருவாக்கப்பட்டவை.
உம்பளச்சேரி மாடுகள்:
இந்த மாடுகள் ஜாதிமாடு, மொட்டை மாடு, மோலை மாடு மற்றும் தெற்கத்தி மாடு என்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இவ்வின மாடுகள் - தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தோன்றி அதனை பூர்வீகமாகக் கொண்டுள்ளன. இவைகள் ஈரம் மிகுந்த பகுதிகளை உழுவதற்கு ஏற்றவையாகும். இவ்வினங்கள் அதிகமான பலத்திற்கும், நீண்ட ஆயுள் காலத்திற்கும் பெயர் பெற்றவை ஆகும்.
புலிக்குளம் மாடுகள்:
இவ்வின மாடுகள் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்திலுள்ள கம்பம் பள்ளத்தாக்குகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவைகள் ஜல்லிக்கட்டு மாடு, கிடாய் மாடு, மற்றும் செந்தாரை எனவும் அழைக்கப்படுகின்றன. நிலத்தினை உரமேற்றவும், உழவு செய்யவும் இவ்வகை மாட்டினங்கள் அதிகம் பயன்படுகின்றன. இவற்றில் மைசூர் வகை மாடுகள் போன்று கொம்புகள் பின்புறமாக வளைந்து காணப்படும்.