வெப்பக்கடத்தல்:
அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளிலிருந்து குறைவான வெப்பநிலையில் உள்ள ஒரு பொருளுக்கு மூலக்கூறுகள் இரக்கமின்றி வெப்பம் பரவும் நிகழ்வு.
வெப்பச் சலனம்:
அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுதல்.
வெப்பக் கதிர்வீச்சு:
வெப்ப ஆற்றல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மின் காந்த அலைகளாகப் பரவும் நிலை.
வெப்பநிலை:
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியைக் குறிக்கும் அளவு.
வெப்ப நிலையின் SI அலகு கெல்வின் (K)
தன் வெப்ப ஏற்புத் திறன்:
ஓரலகு நிறையுள்ள (1 kg) பொருளின் வெப்பநிலையை ஒரு அலகு (1°C or 1 K) உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு.
தன் வெப்ப ஏற்பத் திறனின் SI அலகு JKg^-1 K^-1
வெப்ப ஏற்புத் திறன்:
ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C உயர்த்துவதற்குத் தேவையான வெப்பஆற்றல்.
வெப்ப ஏற்புத் திறனின் SI அலகு J/K .
தினசரி பயன்பாட்டில் செல்சியஸ் என்ற அலகும் பயன்படுத்தப்படுகிறது.
செல்சியஸ் மற்றும் கெல்வின் அளவீடுகளிடையேயான தொடர்பு:K=C+273.15
உருகுதல்:
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திட நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு.
உறைதல்:
ஒரு பொருள் வெப்பத்தை வெளியிட்டு திரவ நிலையில் இருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்வு.
ஆவியாதல்:
ஒரு பொருள் வெப்பத்தை உட்கவர்ந்து திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு.
குளிர்தல்:
வாயு நிலையில் இருக்கும் ஒரு பொருள் வெப்பத்தை வெளியிட்டு திரவமாக மாறும் நிகழ்வு.
உள்ளுறை வெப்பம்:
வெப்பநிலை மாறாத நிலையில் ஒரு பொருள் தன் நிலையை மாற்றிக்கொள்ளும் போது உட்கவரும் அல்லது வெளியிடும் வெப்ப ஆற்றல்.
தன் உள்ளுறை வெப்பநிலை:
ஓரலகு நிறை கொண்ட ஒரு பொருள் திட, திரவ , வாயு ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது வெப்பநிலை மாறாமல் உட்கவரும் அல்லது வெளியிடப்படும் வெப்ப ஆற்றல்.