நூலகம் வேண்டி விண்ணப்பம்

நூலக வசதி வேண்டி நூலக இயக்குநருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.


அனுப்புநர்:

பெயர்,
ஊர்,
மாவட்டம்.

பெறுநர்:

நூலக இயக்குநர் அவர்கள்,

பொது நூலகத் துறை இயக்கம்,

அண்ணா சாலை,

சென்னை-600 002

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: நூலகம் அமைத்துத் தர வேண்டுதல் தொடர்பாக.

 எங்கள் ஊர் (ஊர் பெயர்), இங்கு ஏறத்தாழ 5000 மக்கள் வசிக்கின்றனர்.எங்கள் ஊரில் தொடக்கப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.இதனால் இங்கு படித்தவர் எண்ணிக்கை அதிகம் ஓய்வு நேரங்களில் விடுமுறை நாட்களில் மாணவர்களும் இளைஞர்களும் அறிவைப் பெறும் வகையில் நூலகம் ஒன்று அமைத்துத் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.எனவே நூலகம் ஒன்று எங்கள் ஊரில் அமைத்துத் தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,

பெயர்.

தேதி:

இடம்:

உறையின் மேல் எழுத வேண்டிய முகவரி:

பெறுநர்:

நூலக இயக்குநர் அவர்கள்,

பொது நூலகத் துறை இயக்கம்,

அண்ணா சாலை,

சென்னை-600 002

2 Comments

  1. Thanks its very helpful for me during the exam. Its really very helpful. Keep it up and post many useful blogs for tje youngsters especially the higher secondary school students. Thank you.

    ReplyDelete
Previous Post Next Post