உயிரினத் தோற்றக் கோட்பாடுகள்

உயிரினத் தோற்றத்தை விளக்குவதற்கு கோட்பாடுகள் உள்ளன. உயிரினத் தோற்றம் குறித்த பெரும்பாலான கருத்துக்கள் கீழ்க்கண்ட நான்கு வகைகளில் ஏதேனும் ஒன்றினுள்  தொகுக்கப்படுகின்றன.

  1. சிறப்பான உருவாக்கம்
  2. தான் தோன்றல்.
  3. புவிக்கப்பாலான அல்லது விண்வெளி உயிர் தோன்றல்.
  4. புவிக்குரிய அல்லது உயிர்வழியற்ற தோன்றல்.

1. சிறப்பான உருவாக்கம்:

  • இந்தக் கோட்பாட்டின்படி, இறைத்தன்மை அல்லது சில இயற்கை சக்திகளுக்கு அப்பாற்பட்டு உயிரினங்கள் தோன்றின.
  • இவற்றின் படைப்பு தோன்றியதிலிருந்து எந்த குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கும் உட்படவில்லை என  கருதப்படுகின்றன. 
  • அறிவியல் கருத்துகள் இந்தக் கோட்பாட்டினை ஏற்றுக் கொள்ளவில்லை.
2. தான் தோன்றல்:
  • இந்தக் கோட்பாட்டின்படி,உயிரற்ற பொருட்களிலிருந்து உயிர்கள் தோன்றியுள்ளன.எடுத்துக்காட்டு: தவளை, தேரை, பாம்பு மற்றும் வயல் எலி ஆகியவை மண்ணிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகின்றது.
  • வான் ஹெல்மோண்ட் போன்ற அறிவியல் அறிஞர்கள் இந்த கோட்பாட்டிற்கு ஆதரவு அளித்தார்கள்.ஃபிரான்சிஸ்கோ ரிடி மற்றும் லூயிஸ் பாஸ்டர் போன்ற இதர அறிவியல் அறிஞர்கள் இந்த கோட்பாட்டினை நிராகரித்தார்கள்.
  • பிரான்சிஸ்கோ ரிடி மற்றும்  லூயிஸ் பாஸ்டர் ஆகிய இருவரும், பரிசோதனைகளை மேற்கொண்டு உயிரினங்கள் உயிருடன் இருக்கும் உயிரிகளிலிருந்து மட்டும் தான் தோன்றி இருக்கின்றன என்பதை எந்த சந்தேகங்களுக்கும் இடமின்றி நிரூபித்தார்கள்.
  • பிரான்சிஸ்கோ ரிடி தனது பரிசோதனைக்காக இறைச்சி அல்லது மீனை (விலாங்கு மீன்) பயன்படுத்தினார். 
  • லூயிஸ் பாஸ்டர் ஒரு அன்னம் போன்ற கழுத்து உடைய குடுவையில் இறைச்சியை எடுத்துக்கொண்டு பரிசோதனை செய்தார்.
3. புவிக்கப்பாலான அல்லது விண்வெளி உயிர் தோன்றல்:
  • இந்தக் கோட்பாட்டின்படி, உயிரானது சில இதர கோள்கள் அல்லது விண்வெளியிலிருந்து விண்கற்கள் மூலம் பூமிக்கு வந்து அடைந்தன என நம்பப்படுகின்றது.
  • அர்ரீனியஸ் (1908ல் நோபல் பரிசு பெற்றவர்) என்பவரால் விண்வெளி நுண்ணுயிர்கள் அல்லது உயிர் வேதியியல் சேர்க்கை கோட்பாடு முன்மொழியப்பட்டது.பிரபஞ்சம் முழுவதும் உயிரினங்கள் இருப்பதை இவர் விளக்கினார்.
  • அறிவியல் சமுதாயம் இந்தக் கோட்பாட்டினை ஏற்றுக்கொள்ளவில்லை.
4. புவிக்குரிய அல்லது உயிர்வழியற்ற தோன்றல்:

இந்தக் கோட்பாடு, வேதிவினைத் தொடர் மூலம் உயிரினம் தோன்றுவதை முன்மொழிகிறது.

பூமியின் தொடக்கம்:

விண்வெளிவிண்மீன் தூசுகளிலிருந்து உருவான நமது சூரியன், சூரிய மண்டல இதர கோள்கள் மற்றும் நமது அண்டத்தினை உருவாக்கிய வாயு மேகங்கள் (ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்) ஆகிவற்றிலிருந்து நமது பூமி 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.

நட்சத்திரங்கள் மற்றும் நமது அண்டத்திலுள்ள கோள்களின் தொகுதியை உருவாக்கிய விண்மீன்களின் உள் வாங்குதல் (Implosion) செயலின் மூலம் பூமியானது இன்னும் உருவாக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post