ஒலியை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியவை


  • பொருள்கள் அதிர்வடைவதால் உண்டாகிறது.
  • ஒலியானது ஒரு ஊடகத்தின் வழியே நெட்டலைகளாகப் பரவுகிறது. 
  • ஒலியானது அடுத்தடுத்த நெருக்கமாகவும் நெழிச்சியாகவும் ஊடகத்தின் வழியே பரவுகிறது. 
  • ஒலிஅலை பரவும் போது ஒலிஆற்றல் மட்டுமே பரவுகிறது.ஊடகத்திலுள்ள துகள்கள் நகர்வதில்லை.
  • வெற்றிடத்தின் வழியே ஒலி செல்வதில்லை. 
  • இரண்டு அடுத்தடுத்த நெருக்கம் அல்லது நெகிழ்ச்சிக்கு இடையேயுள்ள தூரம் அலைநீளம் எனப்படும். 
  • ஒரு அலைவு அல்லது அதிர்வு உண்டாக ஆகும் காலம் அலைவுக்காலம் எனப்படும். 
  • ஒரு வினாடி நேரத்தில் உண்டாகும் அலைவுகளின் எண்ணிககை அதிர்வெண் ஆகும். 
  • அலைநீளம், அதிர்வெண் மற்றும் வேகம் இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு: n =1/T.
  • ஒலியின் வேகமானது அது பரவக் கூடிய ஊடகம் மற்றும் வெப்பநிலையைச் சார்ந்தது. 
  • ஒலி எதிரொலித்தல் விதிப்படி ஒலிபடும் திசை, ஒலி எதிரொலிக்கும் திசை மற்றும் செங்குத் கோடு இவை மூன்றும் ஒரே தளத்தில் அமையும்.
  • காலபடுகோணமும் மீள் கோணமும் எப்போதும் சமமாகவே இருக்கும். 
  • எதிரொலியை தெளிவாகக் கேட்க வேண்டுமானால், முதன்மை ஒலிக்கும் எதிரொலிக்கப்பட்ட ஒலிக்கும் இடையேயான இடைவெளி 0.1 வினாடியைவிட அதிகமாக இருக்க வேண்டும். 
  • பெரிய அறையில் ஏற்படுத்தப்படும் ஒலியானது, அறையின் சுவர்களில் பட்டு மீண்டும் எதிரொலிப்பு அடைந்து அதன் கேட்கும் தன்மை சுழியாகும் வரை நீடித்திருக்கும். பன்முக எதிரொலிப்பின் காரணமாக, ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எதிர் முழுக்கம் எனப்படும். 
  • ஒரு வினாடி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பரப்பு வழியே கடந்து செல்லும் ஒலி ஆற்றலின் அளவு ஒலிச்செறிவு எனப்படும்.
  • செறியுணர் ஒலியின் அதிர்வெண்(மனிதனின் செவியால் உணரக்கூடிய ஒலியின் அதிர்வெண்)20 ஹெர்ட்ஸ் முதல் 20000 ஹெர்ட்ஸ் வரை உள்ளது. 
  • செறியுணர் ஒலியின் அதிர்வெண்ணை விட குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி குற்றொலி என்றும், செறியுணர் ஒலியின் அதிர்வெண்ணை விட அதிக அதிர்வென் கொண்டவைமீயொலி என்றும் அழைக்கப்படுகின்றன. 
  • மீயொலியானது மருத்துவத்துறை மற்றும் தொழில்துறைகளில் பயன்படுகிறது. 
  • சோனார் (Sonar) கடலின் ஆழத்தைக் காணவும், நீருக்கு அடியிலுள்ள குன்றுகள், சமவெளிகள், நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பனிப்பாறைகள் ஆகியவற்றைக் கண்டறியவும் பயன்படுகிறது. 
  • நாம் நம் செவியினால் ஒலியை உணர்கிறோம்.
அதிர்வெண்: ஒரு வினாடி நேரத்தில் உண்டாகும் அலைகளின் எண்ணிக்கை.

ஒரு வினாடி நேரத்தில் அலை கடக்கும் தொலைவு திசைவேகம் ஆகும். 

Post a Comment

Previous Post Next Post