வல்லினம் மிகும் இடங்கள்


1)அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்

எடுத்துக்காட்டு:

  • ச்சட்டை. 
  • இந்தக்காலம்.
  • த்திசை? 
  • எந்தப்பணம்?

2)ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • கதவைத்திற.
  • தகவல்களைத்திரட்டு.
  • காட்சியைப்பார்.

3)கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • முதியவருக்குக்கொடு.
  • மெட்டுக்குப்பாட்டு.
  • ஊருக்குச் செல்.

4)என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • எனக்கேட்டார்.
  • வருவதாகக்கூறு.

4)அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • அதற்குச் சொன்னேன் 
  • இதற்குக் கொடு 
  • எதற்குக் கேட்கிறாய்?

5)இனி, தனி ஆகிய சொற்களின்பின் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • இனிக் காண்போம் 
  • தனிச் சிறப்பு

6)மிக என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும். 

எடுத்துக்காட்டு:

  • மிகப் பெரியவர்

7)எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • எட்டுத்தொகை.
  • பத்துப்பாட்டு.

8)ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • தீப் பிடித்தது 
  • பூப் பந்தல்

9)ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:.

  • கூவாக் குயில் 
  • ஓடாக் குதிரை

10)வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • கேட்டுக் கொண்டான் 
  • விற்றுச் சென்றான்

11)அகர, இகர ஈற்று வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • ஆடச் சொன்னார் 
  • ஓடிப் போனார்

12)ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • புலித்தோல்

13)திசைப் பெயர்களின்பின் வலிமிகும்.

எடுத்துக்காட்டு:

  • கிழக்குப் பகுதி 
  • வடக்குப் பக்கம்

14)இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • சாலப் பேசினார் 
  • தவச்சிறிது

15)உவமைத் தொகையில் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • நிலாச் சோறு 
  • கனாக் கண்டேன்

16)சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • மல்லிகைப்பூ 
  • சித்திரைத்திங்கள்

17)தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின்பின் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • தாமரைப்பாதம்

18)சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும்.

எடுத்துக்காட்டு:

  • வாழ்க்கைப்படகு 
  • உலகப்பந்து.

Post a Comment

Previous Post Next Post