கிராம ஊராட்சி


கிராம ஊராட்சி என்றால் என்ன?

கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள், கிராம ஊராட்சி என்று அழைக்கப்படுகின்றன. தலைவர் மற்றும் பகுதி உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.அவர்களது பணிக்காலம் 5 வருடங்கள் ஆகும். கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியர் செயல்படுகின்றார். ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமமும் கிராம ஊராட்சியாக உருமாறியுள்ளது. 

கிராம ஊராட்சியின் செயல்பாடுகள்:

  • குடிநீர் வழங்குதல்
  • தெருவிளக்குகளைப் பராமரித்தல்  
  • சாலைகளைப் பராமரித்தல் கிராம 
  • நூலகங்களைப் பராமரித்தல் 
  • சிறிய பாலங்களைப் பராமரித்தல் 
  • வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தல் 
  • வடிகால் அமைப்புக்களைப் பராமரித்தல் 
  • தொகுப்பு வீடுகளைக் கட்டுதல் 
  • தெருக்களைச் சுத்தம் செய்தல் 
  • இடுகாடுகளைப் பராமரித்தல்
  • பொதுக்கழிப்பிட வசதிகளைப் பராமரித்தல்

விருப்பப் பணிகள்:

1994ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் கீழ்க்கண்ட விருப்ப செயல்பாடுகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் நடைமுறைப்படுத்தியது.

  • கிராமங்களிலுள்ள தெரு விளக்குகளைப் பராமரித்தல் 
  • மரங்களை நடுதல் 
  • விளையாட்டுமைதானங்களைப் பராமரித்தல் வண்டிகள் நிறுத்தப்படும் இடங்களில் உள்ள வாகனங்கள், இறைச்சி கூடங்கள் மற்றும் கால்நடைகளின் கொட்டகை ஆகியவற்றைப் பராமரித்தல்

வருவாய்:

மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி மட்டுமே வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. வரிகள் 

  • சொத்து வரி 
  • தொழில் வரி 
  • வீட்டு வரி
  • குடிநீர் இணைப்புக்கான கட்டணம்  
  • நில வரி 
  • கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள்

கிராம சபை கூட்டங்கள்:

ஒவ்வொரு ஊராட்சியிலும், அவ்வூராட்சி அதிகார எல்லைக்கு உள்ளே வசிக்கும் மக்களே கிராம உறுப்பினர்களாக இருப்பர். ஊராட்சித் தலைவர் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார். கிராம சபை கூட்டங்களில், வரவு செலவு கணக்குகளும், திட்டங்களினால் பயனடைந்தோர் பற்றியும் கலந்துரையாடப்படும்.ஒரு வருடத்தில் நான்கு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும். கூட்டங்கள் நடத்தப்படும் தேதிகள்
  1. சனவரி 26 குடியரசு தினம் 
  2. மே 1 உழைப்பாளர் தினம் 
  3. ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்  
  4. அக்டோபர் 2 காந்தி பிறந்த தினம்

Post a Comment

Previous Post Next Post