ஐந்தாம் பாவம் காதலை உணர்த்தும்
ஐந்தாம் பாவ உபநட்சத்திரம் நின்ற வீடு
மேஷம்
ஆணும் பெண்ணும் சிகையலங்காரத்தில் தன் வெளிப்பாடு இருப்பினும் சற்று ஆதிக்க உணர்வு ஆதிகமாக இருக்கும் .
ரிசபம்
பேசியே பணிய வைப்பதும் முக அலங்காரம் முக்கியத்துவம் பெரும் . ஹோட்டலில் ஒரு காப்பிய வாங்கி ஒருமணிநேரம். பேசுவது இவர்கள் தான்
மிதுனம்
தொலைபேசியில் மணிக்கணக்கா பேசுவது இவர்கள் தான் . இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவர் காரியவாதிகள்.
கடகம்
வண்டி, வாகனத்தை காட்டி தன் வசப்படுதுவதும் வீட்டருகில் உள்ளவர்களை நோட்டமிடுவது இவர்கள் தான் .பூங்காவில் அதிகம் இவர்கள் தான்
சிம்மம்
அலங்கார பிரியர்கள். கவர்ச்சி அதிகம் . இவர்கள் தியேட்டரில் அதிக நேரம் செலவிடுவர் . பிரியமானவரகள.
கன்னி
காதலித்த பின்பு கருத்து வேறுபாடு அதிகம் இருக்கும் .சண்டை பிரியர்கள் .
துலாம்
தூய்மையான காதலர்கள் .விரைவில் வயப்பட்டு விடுவார்கள் .கருத்தொருமித்தவர்கள்.அன்பு நிறைந்திருக்கும் .கடைசி வரை காதல் இருக்கும் .
விருச்சிகம்
கட்டுப்பாடு இல்லாத காதல் .வேதனை படுவதும் இவர்களே .பெண்கள் தன்னை இழந்து பின் கஷ்டபடுவர்.அவமானம் உண்டு .
தனுசு
உயர்ந்த காதல் நம்பிக்கை அதிகம் .ஒருவருக்கொருவர் மதிக்க படுவர் .ஆலயங்களில் அதிகம் சந்திப்புகள் நடக்கும் .
மகரம்
காதல் ஏக்கம் அதிகம் .பயமும் அதிகம் .கற்பனை காதல் .பணிபுரியும் இடத்தில் காதல் வசப்படுவர் .
கும்பம்
இயல்பான காதல். ஒத்து போவதில்லை சமத்தர்கள் .பரிசு கொடுத்து மடக்குவதில் மன்னர்கள் .அன்பு நிறைந்திருக்கும் .
மீனம்
ரகசிய காதல் .ரகசிய நடவடிக்கை நிறைந்திருக்கும் .இவர்களுக்கு பட்டனுபவம் அதிகம் .நிறைவேறாத காதல் அதிகம் .
ஐந்தாம் பாவ உபநட்சத்திரம் தன். காரகத்துவத்தை தான் நின்ற நட்சத்திரத்தின் மூலமாக வெளிப்படுத்தும் .
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஐந்தாம் பாவ உபநட்சத்திரம் சனியாகி செவ்வாய். சாரம்பெற்றால் கருத்தரித்த பின்பே திருமணம் நடைபெருகிறது.
Related: kp உப நட்சத்திர அட்டவணை