மருத்துவ ஜோதிடம் | Kp astrology in tamil

ஒரு பாவத்திற்கு 1, 2 ,3, 5 ,9 ,11ம் பாவங்கள் நன்மையையும் ,4,8 ,10 12-ஆம் பாவங்கள் தீமையையும், 6,7 ஆம் பாவங்கள் மத்திம பலன்களையும் தருபவை.

ஒவ்வொரு பாவமும் அது பெரும் தொடர்பின் மூலம் அது மற்ற 11 பாவங்கள் மீதும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தும்.

ஒரு கிரகம் நின்ற நட்சத்திரம் எந்த பாவ ஆரம்ப முனை களுடன் தொடர்பு கொள்கின்றது அது சம்பவமாகவும் அதே கிரகம் நின்ற உப நட்சத்திரம் நட்சத்திரம் காட்டிய பாவத்திற்கு அல்லது சாதக அல்லது பாதக பலனை தெரிவிக்கும்.

ஒரு சில குறிப்பிட்ட பாவத்திற்கு விதி கொடுத்த பலனை அப்போது அது நடக்கும் மதி என்ற தசா, புத்தி முழுமையாக கொடுக்க அல்லது கெடுக்க முழு அதிகாரம் பெறுகின்றது.

ஒரு குறிப்பிட்ட பாவ செயலை எடுத்து நடத்தும் அதிகாரம் , அந்த பாவ ஆரம்ப முனையில் உப நட்சத்திர அதிபதி விட அதனுடைய நட்சத்திரம் , உப நட்சத்திரத்தின் உள்ள கிரகங்கள் தான் வலிமை வாய்ந்தது .

மேலே குறிப்பிட்ட பாவ ஆரம்ப முனையில் உப நட்சத்திரத்தின் நட்சத்திரம், உபநட்சத்திரம் இவைகளில் எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அந்த பாவ பலனை , பாவ உப நட்சத்திரம் செய்யும்.

ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு அதன் திருகோணத்தை விட  3 7 11-ஆம் பாவங்களாக அந்த பாவத்தில் இருந்து வரும் பாவங்களை நல்ல வலிமையை தரும்

ஒரு குறிப்பிட்ட வாரத்திற்கு 4 8 12 பாவங்கள் கெடுக்கும் ஆற்றலைக் கொண்டது. இதைத்தான் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என முன்னோர்கள் சொல்லிச் சென்றன

பின்வரும் பாவ ஆரம்ப முனை உப நட்சத்திர அதிபதி நின்ற நட்சத்திர அதிபதி உபநட்சத்திரம் வாயிலாக 6 8 12 தொடர்பு கொண்டாள் உண்டாகும் விளைவுகளை காணலாம்

மருத்துவ ஜோதிடத்தில் 12 பாவங்கள்

1-ம் பாவம் 

  • தலைப்பகுதி
  • மூளை
  • சுய சிந்தனை
  • செயல்திறன் பாதிப்பு

2-ம் பாவம்

  • கண்
  • பல்
  • வாய்
  • தொண்டை
  • உடல் எதையும் ஏற்காமல் இருப்பது

3-ம் பாவம்

  • தோல் பட்டை
  • காது 
  • உணர்வு புலன்
  • ரத்தநாளம்
  • நரம்பு மண்டலங்கள்
  • உடல் மெலிதல்

4-ம் பாவம்

  • நுரையீரல்
  • உடல்பருமன்
  • உடலில் உற்பத்தி செய்யும் உறுப்புகளில் நோய்

5-ம் பாவம்

  • விந்தனு
  • ரத்த அணுக்கள்
  • இதயம்
  • முதுகு

6-ம் பாவம்

  • வயிறு
  • ஜீரண சுரப்பிகள்
  • தவறான உணவு பழக்கம்

7-ம் பாவம்.

  • தொற்று நோய்
  • கிட்னி சம்பந்தமான நோய் 
  • தட்பவெப்ப இயற்கை மாற்றத்தால் நோய்

8-ம் பாவம்

  • மர்மஸ்தான நோய்
  • உடல் உறுப்பு சேதம் அடைவதால் நோய்

9-ம் பாவம்

  • பாரம்பரிய நோய்கள்

10-ம் பாவம்

  • தேவைக்கு அதிகமாக உடலில் சக்தி உற்பத்தியால்
  • தொடையிலும் நோய்

11-ம் பாவம்

  • வைட்டமின் பற்றாக்குறை மற்றும் 
  • கால் மூட்டுகளில் நோய்

12-ம் பாவம்

ஒவ்வாமை, உறுப்பு செயலிழத்தல், ரகசிய, உடலில் கழிவு வெளியேறுவதால்.

Related: kp உப நட்சத்திர அட்டவணை

Post a Comment

Previous Post Next Post