பள்ளி நூலகத்திற்கு சில புத்தகங்கள் தேவைப்படுவதை சுட்டிக்காட்டி அதனை கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு மின்னஞ்சல் கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(பள்ளி மாணவர்களுககாக). கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி: சரவணன்@ஜிமெயில்.காம்
தலைப்பு: புத்தகங்கள் வேண்டுதல் தொடர்பாக
-----------------------------------------------------------------------------
அனுப்புநர்: சரவணன்@ஜிமெயில்.காம்
-----------------------------------------------------------------------------
பெறுநர்: கண்ணன் பதிப்பகம்@ஜிமெயில்.காம்
-----------------------------------------------------------------------------
நாள்: தேதி
-----------------------------------------------------------------------------
பொருள்: புகைப்படங்கள் வேண்டுதல் தொடர்பாக.
-----------------------------------------------------------------------------
மதிப்பிற்குரிய ஐயா/அம்மா,
வணக்கம் நான் சரவணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன். இந்த வருடம் நூலகத்திற்கு நூல்கள் வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்கள் பள்ளி நூலகத்திற்கு சில புத்தகங்கள் தேவைப்படுகிறது. அதனை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
முகவரி:
சரவணன்,
அரசு மேல்நிலைப்பள்ளி,
இடம்.
நன்றி
இப்படிக்கு ,
தங்கள் உண்மையுள்ள,
சரவணன்
இணைப்பு:
தேவைப்படும் நூல்கள்
புத்தகங்கள் | எண்ணிக்கை |
---|---|
நன்னெறி | 5 |
தமிழ்ச்சொல் வளம் | 4 |
இக்கால இலக்கியம் | 4 |
தேர்வை எதிர் கொள்வது எப்படி? | 4 |
தமிழ் அறிஞர்கள் | 5 |