இந்திய அரசியல் அமைப்பின் முகவுரை

முகப்புரை என்பது இயற்றப்பட்ட சட்டத்தை அறிமுகம் செய்து வைக்கும் பகுதியாகும். முதன்முதலில் முகப்புரையை அரசியலமைப்பில் வழங்கிய நாடு அமெரிக்கா. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பல நாடுகள் வழங்கியது.

முகப்புரை: 

இந்திய மக்களாகிய நாம், இந்தியாவை ஒரு இறையாண்மை மிக்க, சமதர்மம் சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி (JUSTICE) கிடைக்கவும் சிந்தனையில் சிந்தனையை வெளிப்படுத்துவதில், நம்பிக்கையில், பற்றுறுதியில் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும் (LIBERTY),தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவம் (EQUALITY), உறுதியாக அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும்,சகோதரத்துவத்தை (FRATERNITY) அனைவரிடத்தில் வளர்க்கவும், நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைபாட்டுக்கும் உறுதியளிக்கும் வகையில் உள்ளார்ந்த உறுதி பூண்டு, 1949 நவம்பர் 26-ம் நாளாகிய இன்று இந்த அரசமைப்பினை ஏற்று இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்.

இந்திய அரசியல் அமைப்புக்கு முகவுரை வேண்டும் என்று கூறியவர் ஜவஹர்லால் நேரு ஜவஹர்லால் நேரு அவர்களால் டிசம்பர் 13, 1946 ல் இந்திய அரசியல் நிர்ணய சபையின் குறிக்கோள்கள் பற்றிய தீர்மானம் முன்மொழியப்பட்டு, ஜனவரி 22,1947 அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்பு நவம்பர் 26 1949 ஆம் ஆண்டு இது இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது (DATE OF ADOPTION).

முகவுரையின் சாராம்சம்:

இந்திய மக்களாகிய நாம், நமக்கு நாமே வழங்கிக் கொண்டது இது. இதன் பொருள் இந்திய சாசனத்துக்கு இந்திய மக்களே எஜமானர்கள்.

இந்தியாவுக்கு சாசனம் வழங்கும் ஐந்து தூண்கள்:

  1. இறையாண்மை(sovereignty)
  2. சமதர்மம் (socialism)
  3. சமயச் சார்பின்மை (secularism)
  4. ஜனநாயகம் (democracy)
  5. குடியரசு (republic)
முகப்புரையின் முக்கியத்துவம் : 
  1. அரசியலமைப்புச் இயற்றியவர்கள் எந்நோக்கத்திற்காக அதனை இயற்றினார்கள், அதன் மூலம் அவர்கள் அடைய விரும்பிய அரசியல், சமுதாய, பொருளாதார மாறுதல்கள் யாவை என்பன பற்றிய குறிப்புகளை முகவுரை பகிர்கிறது. 
  2. அரசியலமைப்பின் உட்பிரிவுகளில் காணப்படும் குழப்பங்களை தெளிவுறுத்தவும் சில நேரங்களில் முகப்புரை பயன்படுகிறது.
  3. இதன் மூலம் நீதித்துறை அரசியலமைப்பின் மாண்பினை சரியான கோணத்தில் விளம்ப இயலும். மேலும் அரசியலமைப்பின் இறையாண்மை அதிகாரத்தை மூலவர் எவர் என்பதனையும், அரசியலமைப்பு இயற்றப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளினையும் முகவுரை கொண்டுள்ளது.
முகப்புரை சாசனத்தின் ஒரு பகுதியா இல்லையா?

கேசவனந்தா பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் முகப்புரையும் சாசனத்தின் ஒரு பகுதிதான்.முகப்புரையை உள்ளடக்கியது தான் சாசனம் என்று தீர்ப்பு வழங்கியது.

முகப்புரையின் சட்டத்திருத்தம் : 

முகவுரையில் இதுவரை ஒரே ஒருமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 42வது சட்ட திருத்தம் (1976) மூலம் சமதர்மம், மதச்சார்பற்ற என்ற வார்த்தைகளும், ஒருமைப்பாடு என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post