கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் சட்ட வளர்ச்சி

ஒழுங்கு முறைச் சட்டம் (1773): 

  1. இது இந்திய அரசியல் அமைப்பின் முதல் சட்டம் ஆகும்
  2. இங்கிலாந்து பிரதமர் நார்த் பிரபு வணிகக்குழுவின் விவகாரங்களை விசாரிக்க தேர்வுக் குழுவை நியமித்தார். இந்திய அரசியலமைப்பு வரலாற்றில் 1773 ஒழுங்கு முறைச்சட்டம் மிக முக்கியமானது.
  3. இச்சட்டம் வங்காளத்தின் ஆளுநரை அதன் தலைமை ஆளுநராக மாற்றியது.அவருக்கு உதவியாக நான்கு பேர் கொண்ட குழு ஒன்றையும் ஏற்படுத்தியது.
வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் ஆவார்.

கல்கத்தாவில் 1774-இல் தலைமை நீதிமன்றம் அமைக்கப்பட்டது.ஒரு தலைமை நீதிபதியும் மூன்று துணைநீதிபதிகளும் இருப்பார்.

 கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி வாரன் ஹேஸ்டிங்ஸ் ஆவார்.

இந்தியாவில் கம்பெனி நிர்வாகத்தின் மீது பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தனது கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக அச்சட்டம் அமைந்தது. இச்சட்டம் முதல் முறையாக மைய அரசாங்கம் அமைவதற்கான அடித்தளமாக இருந்தது. 

இச்சட்டத்தில் 1781 ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது இந்த திருத்தச் சட்டமானது தீர்வு சட்டம் (Act of settlement) என அழைக்கப்பட்டது.

பிட் இந்திய சட்டம் (1784):

1773-ல் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய பிட் இந்தியச் சட்டம் உருவாக்கப்பட்டது.இச்சட்டம் இங்கிலாந்து பிரதமர் இளையபிட் மூலம் கொண்டுவரப்பட்டது

கம்பெனியின் வணிகக்குழுவுக்கு இயக்குநர் பொறுப்பு (the court of directors) மட்டுமே அளிக்கப்பட்டது.
அரசியல் விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஆறு உறுப்பினர்கள் கொண்ட கட்டுப்பாட்டு வாரியம் (the board of control) அமைக்கப்பட்டது. 

இந்திய நிர்வாகம் தொடர்பான அலுவல்களைக் கவனிக்க இங்கிலாந்தில் தனித்துறை அமைக்கப்பட்டது.

முதன் முறையாக கம்பெனியின் நிலப்பகுதிகள் பிரிட்டிஷ் இந்தியாவின் நிலப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டது.

பட்டைய சட்டம் (1813):

ஒவ்வொரு இருபதாண்டுகளுக்கு ஒருமுறை சாசனச் சட்டங்களை கிழக்கிந்தியகம்பெனியின் சாசனத்தை நீட்டிக்க வகை செய்தது.கல்விக்கு ஒரு இலட்சம் நிதியாக வழங்கப்பட்டது.

பட்டைய சட்டம் (1833):

வங்காளத்தின் தலைமை ஆளுநரை இந்தியாவின் தலைமை ஆளுநராக மாற்றியது, மேலும் அவருக்கு அனைத்து நிர்வாக மற்றும் இராணுவ அதிகாரங்களும் அழிக்கப்பட்டன.
வில்லியம் பெண்டிங் பிரபு இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் ஆவார்.

அனைத்து சிவில், ராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்தி, கண்காணிக்கிற அதிகாரம் தலைமை கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டது.

மைய அரசு வலிமை உடையதாக மாறியது மாகாணங்கள் தங்களுக்கென சட்டமியற்றிக் கொள்ளும் உரிமைகள் இழந்தன.இந்தியாவின் தலைமை ஆளுநருக்கு அனைத்து சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் வழங்கியது.

பட்டைய சட்டம் (1853):

சட்டமியற்றும் பணிக்காக தலைமை ஆளுநரின் கவுன்சிலில் மேலும் ஆறு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

கவுன்சிலின் சட்டமியற்றும் பணியும், நிர்வாகப் பணியும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டன.

மேலும் இச்சட்டம் மத்திய சட்டமன்றத்தில் முதன்முதலாக இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் ஏற்படுத்த வழிவகை செய்தது.

மெக்காலே குழு வழங்கிய பரிந்துரையின் படி குடிமைப் பணிக்கான போட்டி தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது

Post a Comment

Previous Post Next Post