சாலைவிதிகள் கட்டுரை

சாலை விதிகள் பற்றிய கட்டுரை எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.

முன்னுரை:

ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்கள் மூலமாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் சாலைவிபத்துகள் பற்றிய செய்திகளை நாம் அறியமுடிகிறது. இக்கால கட்டத்தில் சாலை விபத்துகள் மிக அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனால் எண்ணற்ற உயிர்கள் பலியாகின்றன. உடலின் உறுப்புக்களை இழந்து தவிப்போர் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. இதற்கெல்லாம் சாலைவிதிகளை நாம் மதிக்காமல் நடப்பதே காரணமாகும். 

பொருளுரை:

சாலையில் விபத்துகள் நேரிடா வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்துக் காவல்துறையினர் பணிசெய்கின்றனர். மேலும் பல இடங்களில் வண்ண விளக்குகள் மூலமாக சாலை போக்குவரத்து நெறிப்படுத்தப்படுகிறது.

சிவப்பு வண்ண விளக்கு நில்' என்ற கட்டளையையும் மஞ்சள் வண்ண விளக்கு தயாராக இரு' என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது.

இடது பக்கம் செல்லவேண்டும் என்பது சாலை விதிகளில் முக்கியமானதாகும். பாதசாரிகள், நடப்பதற்கான நடைமேடையில் செல்ல வேண்டும். எதிர்த்திசையில் சாலைகளைக் கடக்கும் பொழுது, அதற்கென கோடு போட்டிருக்கும் இடத்தில்தான் கடக்க வேண்டும்.

சிவப்பு வண்ண விளக்கு நில் என்ற கட்டளையையும் மஞ்சள் வண்ண விளக்கு தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு புறப்படு என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது.

இடது பக்கம் செல்லவேண்டும் என்பது சாலை விதிகளில் முக்கியமானதாகும். பாதசாரிகள் நடப்பதற்கான நடைமேடையில் செல்ல வேண்டும். எதிர்த்திசையில் சாலைகளை கடக்கும் போது அதற்கென கோடு போட்டிருக்கும் இடத்தில்தான் கடக்க வேண்டும் போக்குவரத்துக் காவல்துறையினரின் கட்டளையை மீறி நாம் செல்லக் கூடாது.

வாகனம் ஓட்டுபவர்களுக்கென கூறப்பட்டுள் சாலை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.

இரு சக்கர வாகனங்களில் இருவருக்கு மேல் பயணிக்கக்கூடாது. பேருந்துகளில் பயனத்தின் போது படிக்கட்டுகளில் நிற்கக் கூடாது. வண்டி ஓட்டுபவர்கள் உடல்நிலை, மனநிலை பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது, கண்டிப்பாக வண்டி ஓட்டக்கூடாது. மதுவருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும். எந்தவொரு வண்டியையும் முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்லக்கூடாது. பள்ளிகள் மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருக்க ஒலிப்பானை ஒலிக்கக்கூடாது.

முடிவுரை :

உயிர் விலைமதிப்பற்றது மனித உயிர் மட்டுமல்ல; பறவைகள், விலங்குகள் என்று அனைத்து உயிர்களுமே விலை மதிப்பற்றவை. சாலை விபத்தின் போது அந்த ஜீவன்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே சாலை விதிகளை நாம் பின்பற்றி நடக்க வேண்டும்.

"சாலை விதிகளை மதிப்போம் விலை மதிப்பில்லா உயிரைக் காப்போம்.

Post a Comment

Previous Post Next Post