அமர்த்தியாகுமார் சென்
1. வறுமை மற்றும் பஞ்சம்
சென்னின் வறுமை மற்றும் பஞ்சம் உரிமைம் மற்றும் இழப்பு பற்றிய ஓர் கட்டுரை (1981) சிறந்த ஒன்றாக இருக்கிறது. வறுமை பற்றிய பல்வேறு விளக்கங்களை ஆராய்ந்து முழு வறுமை மற்றும் தொடர்புடைய வறுமை ஆகியவைப் பற்றிய காரணங்களைக் கூறி கவனத்தை ஈர்க்கின்றனர்.
2. வறுமை மற்றும் சமத்துவமின்மை
வருமானப் பகிர்வு மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களின் நுகர்வு ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சென் அவர்களின் முக்கியக் கருத்தாகும்.
3. திறன் பற்றிய கருத்து
சென் அவர்களின் கருத்துப்படி திறன் என்பது அடிப்படை கச்சாப் பொருட்களை மக்கள் நலத்திற்காக மாற்றி அமைப்பது ஆகும்.
4. உரிமைகள்
ஊட்டச்சத்து உணவு, மருத்துவம், உடல் நலப் பாதுகாப்பு. வேலை வாய்ப்பு, பஞ்சத்தின் போது வழங்கப்படும் உணவு ஆகியவை நமது உரிமைகளாக மாற வேண்டும் என்று சென் கருதினார். இத்தகைய உரிமைகளை வழங்குவதில் ஏற்பட்ட தோல்வியே பஞ்சம் ஏற்படுவதற்கு காரணமாகும் என அவர் கருதினார்.
5.தொழில் நுட்பத் தெரிவு
மூலதன செறிவு நுட்ப முறையில், உழைப்பாளர்கள் உபரியாக உள்ள பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது கடினம் என்று தொழில் நுட்பத் தெரிவு என்ற புத்தகத்தில் சென் குறிப்பிடுகிறார்.