குடிநீர் வசதி வேண்டி ஊராட்சி மன்றத் தலைவருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.(பள்ளி மாணவர்களுககாக)
குடிநீர் வசதி வேண்டி விண்ணப்பம்
அனுப்புநர்
பெயர்,
முகவரி,
இடம்.
பெறுநர்
ஊராட்சி மன்றத் தலைவர் அவர்கள்,
ஊராட்சி மன்ற அலுவலகம்,
கிராமத்தின் பெயர்,
ஊராட்சியின் பெயர்.
ஐயா,
வணக்கம், எங்கள் தெருவில் உள்ள குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.இதனால் தண்ணீர் இன்றி எங்கள் தெருவில் வசிப்போர் துன்பப்படுகின்றனர்.எனவே உடைந்து போன குடிநீர் குழாயை சரி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,
பெயர்
Tags:
letter