காலத்தை வெல்லும் கணினி
குறிப்புச்சட்டம் |
---|
முன்னுரை |
கணினியின் தோற்றம் |
கணினியின் வகைகள் |
கணினி வழிக் கல்வி |
உலகம் உள்ளங்கையில் |
இணையதள வசதி |
இணைய வகைகள் |
பயன்படும் துறைகள் |
முடிவுரை |
முன்னுரை:
அறிவியலின் அற்புதப் படைப்பான கணினி மனித மூளையையே விஞ்சிவிட்டது. கண் இன்றியமையாத உறுப்பு என்போம். கணினி கண்ணிலும் மேலாகச் செயல்படுகிறது.
கணினியின் தோற்றம்:
கணினியின் முன்னோடி எனப்படுவது அபேக்ஸ் எனப்படும் சீனர்களின் அறிவியல் சாதனமாகும். மின்னனுக் கணினியை டாக்டர் ஆலன் எம் டூரிங் 1824 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஹோவன்ட் தற்போதைய கணினியை கண்டுபிடித்தார். சார்லஸ் பாப்பேஜ் என்பார் 1883 ல் கணினியை வடிவமைத்தார். இவரே கணினியின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
கணினியின் வகைகள்:
கணினியானது காலத்திற்கேற்ப பல வடிவத்தை பெற்றுக் கொண்டே வருகிறது.
- பல்லூடகக் கணினி
- மடிக் கணினி
- கையடக்க கணினி
கணினி வழிக் கல்வி:
கணினியைப் பயன்படுத்தி கற்றலை மிகவும் எளிமையாக்க கணினி இன்றைய நாளில் மிகவும் பயன்படுகிறது. பல வண்ணங்களோடு திரை வீழ்த்தி மூலமாக கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் ஆர்வமாக கற்கின்றனர். மேலும் இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் பாடப்பொருளை சேகரித்து கற்கின்றனர்.
உலகம் உள்ளங்கையில்:
உலகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நாம் கணினி மூலம் அறிந்து கொள்ளலாம். அறிவியல், கணிதம், மருத்துவம், வணிகவியல் என அனைத்துத் துறைகளிலும் பயன்படும் நிலை கணினிக்கு உள்ளது. கணினியும் இணையதளமும் உலகத்தை நம் உள்ளங்கைக்கே கொண்டுவந்து விட்டன.
இணையதள வசதி:
இணைய சேவைக்கு உரியவரிடம் தனி கணக்குத் தொடங்கி இணையதளத்துடன் இணைக்க வேண்டும். இணையதளம் மூலம் நாம் அனைத்துத் துறை சார்ந்த செய்திகளை நாம் பெறலாம். மேலும் பல செய்திகளை அழியாமல் காக்க இது பயன்படுகிறது.
இணைய வகைகள்:
- குறும்பரப்பு வலைப்பின்னல் LAN
- அகன்றபரப்பு வலைப்பின்னல் WAN
- வையக(உலகம்) விரிவு வலைப்பின்னல் www
பயன்படும் துறைகள்:
இருபதாம் நூற்றாண்டில் கணினியானது அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வங்கிகள், தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், வணிக வளாகம், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்துத் துறைகளிலும் கணினியானது பயன்படுகிறது. வியத்தகு சாதனைகள்: கணக்கிட இயலாதவற்றையும் கணக்கிடும் கணினி, ஏவுகனைகளையும் செயற்கைக் கோள்களையும் ஓரிடத்தில் இருந்தபடியே கட்டுப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
முடிவுரை:
கணினி மனித வாழ்க்கையின் உயிர்நாடியாகிவிட்டது. கணினியை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தி வாழ்க்கையை வளமுடையதாக்குவோம்.
நன்றி: க.வேல்முருகன் (தமிழ் ஆசிரியர்)