தமிழகம் முழுவதும் 6/04/2021 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பொதுமக்களும் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். ஓட்டுப்பதிவு காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:30 மணிக்கு முடிவடைந்தது.
திருச்சுழி தொகுதியில் 77.44 சதவீத ஓட்டுகள் பதிவானது.
திருச்சுழி தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான ஓட்டு 1,71,191. ஆண் வாக்காளர்கள் 83,533, பெண் வாக்காளர்கள் 87,658.
திருச்சுழி தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 73.69 சதவீதம் பதிவானது. விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தொகுதியில் தான் அதிக அளவில் வாக்குகள் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
tamil-trending