பூங்கா வசதி வேண்டி மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.
அனுப்புநர்
பெயர்,
முகவரி,
இடம்.
பெறுநர்
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி அலுவலகம்,
இடம்.
ஐயா,
பொருள்: பூங்கா அமைந்து தருதல் தொடர்பாக
வணக்கம், நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன் எங்கள் பகுதியில் நிறைய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வசித்து வருகின்றனர். எனவே குழந்தைகள் விளையாடுவதற்கும் பெரியவர்கள் ஓய்வு எடுப்பதற்கும் நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் பூங்கா ஒன்று எங்கள் பகுதியில் அமைத்து தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
நாள்:
இடம்:
இப்படிக்கு,
(உங்கள் கையொப்பம்).
உறைமேல் முகவரி:
பெறுநர்:
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
மாநகராட்சி அலுவலகம்,
இடம்.
Tags:
letter