2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் மே-2 ஆம் தேதி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை ஶ்ரீ வித்யா கல்லூரியில் நடைபெற்றது.
திருச்சுழி தொகுதியில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார். அருப்புக்கோட்டை தொகுதியில் இருந்து திருச்சுழி தொகுதி 2011 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இருந்து திருச்சுழி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் திரு தங்கம் தென்னரசு.
திருச்சுழி தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 77.44 சதவீத ஓட்டுகள் பதிவானது.
திருச்சுழி தொகுதியில் 2021 தேர்தலில் பதிவான ஓட்டு 1,71,191. ஆண் வாக்காளர்கள் 83,533, பெண் வாக்காளர்கள் 87,658.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | வாக்கு வித்தியாசம் |
---|---|---|---|---|
2011 | தங்கம் தென்னரசு | தி.மு.க | 81613 | 19952 |
2016 | தங்கம் தென்னரசு | தி.மு.க | 89927 | 26577 |
2021 | தங்கம் தென்னரசு | தி.மு.க | 1,01,673 | 61277 |
விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் ஶ்ரீ வில்லிபுத்தூரை தவிர அனைத்து தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றியது. விருதுநகர் மாவட்டத்தில் திரு தங்கம் தென்னரசு அவர்களே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஆவார்.இவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேர்களில் அ.தி.மு.க வைத் தவிர அனைத்து கட்சிகளும் டெபாசிட் இழந்தது.
மாநில அளவில்அதிக வாக்கு வித்தியாசம்
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு
இந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்திலான வெற்றி இதுவாகும்