பௌர்ணமி யோகம் எப்போது வேலை செய்யும்

பௌர்ணமி யோகம் என்பது ஒரு ஜாதகர்க்கு சிறந்த கொடுப்பினை என்பதை யாராலும் மறுக்க இயலாது...அதே நேரத்தில் பௌர்ணமி யோகம் எப்போது முழுமையாக செயல்படும், எப்போது பகுதியாக செயல்படும், எப்போது முற்றிலும் பலமிழந்து செயல்படாமல் போகும் ,தசா புத்தியை எப்படி சம்பந்தப்படுத்தி பலன் எடுக்க வேண்டும் போன்ற சில விபரங்களை இங்கே உதாரணத்துடன் காணலாம்.


படம்:(FIGURE 1)

மேஷத்தில் ராகு 28 பாகை , ரிஷபத்தில் சந்திரன் 4 பாகை, விருச்சிகத்தில் சூரியன் , அன்றைய தினம் பௌர்ணமி என கொண்டால் ..இரண்டுக்கும் இடைப்பட்ட பாகை வேறுபாடு 6 degree என்பதால் பௌர்ணமி சந்திரன் தனது வலிமையை முழுதும் ராகுவிடம் இழந்தார்...ராகு மற்றும் சந்திரன் வெவ்வேறு ராசிகளில் அமர்ந்தாலும், நெருக்கம் காரணமாக அதிக சுபரான பௌர்ணமி சந்திரன் ராகுவுடன் சேர்ந்ததால் தனது ஆற்றலை எல்லாம் ராகுவிற்கு தந்து, தான் அடங்கி போவார்.

தசா புத்தி விளைவு சந்திர தசையினில் சந்திரன் தனது காரகங்களையும், ஆதிபத்தியத்தையும் முழுதுமாக இழந்து, ராகு தசையில் , ராகு , சந்திரனுக்கு உரிய பலன்களை தருவார். சந்திரனை பார்க்கும் சுப அல்லது அசுப கிரகங்கள் பொறுத்து இந்த பலனில் சற்று ஏற்றமோ அல்லது இறக்கமோ இருக்கலாம்.

படம்:2(FIGURE 2)

மேஷத்தில் ராகு 21 பாகை. ரிஷபத்தில் பௌர்ணமி சந்திரன் 4 பாகை..இரண்டிற்கும் வேறுபாடு 13 பாகை என்பதால் பௌர்ணமி சந்திரன் தனது சரிபாதி வலிமையை இழந்தார்...

சந்திர தசையில் , தனது காரகம் மற்றும், ஆதிபத்யங்கள் ஆகியவற்றை பௌர்ணமி சந்திரன் சரி பாதி பலன்களை கொடுக்கும்..ராகு தசையில் , சந்திரனிடம் இருந்து பெற்ற சுபத்தை சேர்த்து ராகு பலன் தருவார்...

படம்:3(FIGURE 3)

மேஷத்தில் ராகு 11 பாகை..ரிஷபத்தில் சந்திரன் 4 பாகை...இரண்டிற்கும் உள்ள பாகை வேறுபாடு 23 degree. ஒரு கிரகம் ஒரே ராசியில் இருந்தால் கூட 22 பாகைக்கு மேல் வேறுபாடு இருந்தால் அந்த கிரகங்கள் சேர்க்கை இல்லை எனும் கணக்கின் படி , மேஷ ராகுவிற்கும், ரிஷப பௌர்ணமி சந்திரனுக்கும் தொடர்பு இல்லாமல் போனது.

பௌர்ணமி சந்திரன் தனது வலிமை குன்றாமல், முழு சுபராக இருப்பதால் , சந்திர தசை சிறப்பாக அமையும்.அப்போது தனது முழு வலிமையுடன் சந்துரன் செயல்படுவார்.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது (Energy can neither be created, nor be destroyed.) என்ற விதி இங்கே செயல்படுகிறது. இராசி கட்டங்களை பார்ப்பதோடு மட்டுமின்றி பாகைகளையும் கவனித்து கொள்ளுங்கள் இன்னும் சில விஷயங்கள் தெளிவாக புரியும்.

Post a Comment

Previous Post Next Post