வெளிநாடு சென்ற தந்தைக்கு உறவுமுறை கடிதம்

வெளிநாடு சென்ற தந்தைக்கு பல மாதங்களாக ஊரடங்கு காரணத்தால் வீட்டிற்கு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் தங்கி வேலை செய்யும்  தந்தைக்கு வீட்டு நிலவரங்களை விளக்கி ஓர் உறவுமுறை கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.


பெயர்

இடம்.

அன்பிற்குரிய தந்தை,

நாங்கள் அனைவரும் நலம், நீங்கள் நலமா?. நீங்கள் அனுப்பிய கடிதம் எங்களுக்கு கிடைத்தது. அம்மாவும் நானும் உங்கள் கடிதத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். கொரோணா பெருந்தொற்றின் காரணமாக எனக்கு இன்னும் பள்ளிகள் திறக்கவில்லை. வீட்டில் இருந்துதான் படிக்கிறேன். போன‌ மாதம் நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்து விட்டது. வீட்டு செலவுகளுக்கு நீங்கள் அனுப்பிய பணம் போதுமானதாக உள்ளதாக அம்மா கூறச் சொன்னார். உங்களின் அறிவுரைப்படி நானும் தாயும் முகக்கவசம் அணியாமல் எங்கும் செல்வதில்லை.

நீங்கள் விரும்பிய படி நான் நன்றாக படிக்கிறேன். நான் நன்றாக படிப்பதால் தாயும் மகிழ்ச்சியாக உள்ளார். போன வாரம் நானும் அம்மாவும் கொரோணா தடுப்பூசி செலுத்தி கொண்டோம்.

ஒரு வருடமாக உங்களை காணாமல் மிகவும் வருந்தினேன்.ஆனால் கொரோணா படிப்படியாக குறைவதால் விரைவில் விமான சேவை தொடங்கி உங்களை காண முடியும் என்ற மகிழ்ச்சி என்னுள் பிறந்துள்ளது.

இப்படிக்கு உங்கள் அன்பு மகன்,

பெயர்.

உறைமேல் முகவரி:

பெறுநர்:

ராமசாமி(தந்தையின் பெயர்),

வாடிக்கையாளர் சேவை அலுவலர்,

ஆரவ் எலக்ட்ரானிக்ஸ்,

சிங்கப்பூர்.

Post a Comment

Previous Post Next Post