எழுத்தர் வேலை வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம்.( கீழே தரப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
க.விஜய்,
157, சுபம் தெரு,
அண்ணா நகர்,
மதுரை.
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
ஐயா,
பொருள்: எழுத்தர் வேலை தர வேண்டுதல்.
வணக்கம். நான் இளங்கலைப் பட்டம் பெற்றவன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தட்டச்சும், சுருக்கெழுத்தும் கற்றுத் தேர்ச்சியுற்றவன், படித்து முடித்து ஐந்தாண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும் வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தில் மூத்தவன் நான். முதுமை எய்திவிட்ட என் பெற்றோரைக் காப்பதோடு, என் தங்கையை மணமுடித்துக் கொடுக்க வேண்டியவனாவும் இருக்கிறேன். எங்களுக்குச் சொந்த வீடோ, நிலமோ இல்லை. வறுமையில் வாடும் எங்கள் குடும்பத்தைக் காக்க, நானும் என் தங்கையும் துணிக்கடை ஒன்றில் வேலை செய்கிறோம். எங்கள் வருவாய் மிகக் குறைவு.
இந்நிலையில் எனக்கு அரசு பணி கிடைத்தால் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். என் கல்வித் தகுதியையும் குடும்ப நிலையையும் கருத்தில் கொண்டு, தங்கள் அலுவலகத்தில் எனக்கோர் எழுத்தர் வேலை வழங்கி உதவுமாறு தங்களைப் பணிவுடன் வேண்டுகிறேன்.
இடம்: மதுரை
நாள்:247/7/2021
தங்கள் உண்மையுள்ள,
க.விஜய்
உறைமேல் முகவரி:
பெறுநர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.