பரணி நட்சத்திரம் சந்திரனின் கர்ம பதிவு கொண்ட நட்சத்திரம் ஆகும். பரணி நட்சத்திரத்திற்கு சந்திரனின் கர்ம பதிவு எப்படி வந்தது என்று இப்போது பார்ப்போம்.
பரணி நட்சத்திரம் துரியோதனன் பிறந்த நட்சத்திரம். துரியோதனன் அவன் தாய் மாமன் சகுனியின் பேச்சைக் கேட்டு அழிந்தது நாம் அறிந்ததே. மகாபாரத போர் இறுதி கட்டத்தை எட்டும் போது சகுனியின் ஆலோசனை படி தூரியோதனின் தாய் காந்தாரி தனது தவ வலிமையை தன் மகனான துரியோதனனுக்கு தர ஒப்புக்கொள்வார். காந்தாரி தன் கணவன் பார்க்காத இந்த உலகத்தை தானும் பார்க் கூடாது என்று கண்களை கட்டி கொண்டு தவ வாழ்வு வாழ்ந்தவர். இதனால் அவர் யாரை கண்ணை திறந்து முதலில் பார்க்கிறாரோ அவரது உடல் வஜ்ரமாக மாறும்.அதாவது எந்த ஆயுதத்தை வைத்து தாக்கினாலும் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அப்போது கிருஷ்ணர் துரியோதனன் முன் தோன்றி பெற்ற தாய் முன் பிறந்த மேனியாக நிற்க போகிறாய என்று குழப்பிவிடுவார். துரியோதனனுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்துவதை விட அவன் மனதை குழப்புவதுதான் சிறந்த வழி என்பதை அறிந்து அவனது மனதை குழப்பிவிடுவார். இதனால் துரியோதனன் தன் தொடையளவு இலையை வைத்து மறைத்து தன் தாய் முன் நிற்பார். இதனால் அவன் தொடைப் பகுதி வஜ்ரமாக மாறாமல் போய்விடும். கடைசியில் பீமன் தொடைப் பகுதியில் துரியோதனனை அடித்து கொள்வார் என நாம் அறிந்ததே. துரியோதனன் தாய் தனது முழு தவப் பலனை தந்தும் துரியோதனனை காப்பாற்ற முடியவில்லை.
பரணி நட்சத்திர காரர்கள் அடுத்தவர் பேச்சை கேட்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் ஒரு முடிவு எடுத்து விட்டு பிறரிடம் ஆலோசனை கேட்பது பரணி நட்சத்திரக்காரர்களுக்கு நல்லதல்ல. அடுத்தவர் ஆலோசனைகளை கேட்டு மனதை குழப்பி கொண்டால் தரணி ஆள வேண்டிய பரணி நட்சத்திரத்திற்கு துரியோதனன் போல் இருப்பதையும் இழக்க வேண்டிய நிலைமைதான் வரும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயை மதிக்க கற்று கொள்ள வேண்டும்.துரியோதனன் தன் தாயை மதிக்காததால் அவனுடைய தாய் அவனுக்கு தவ பலன் முழுவதையும் அளித்தும் அது அவனுக்கு பலன் தருவதில்லை.
பரணி நட்சத்திர காரர்கள் ஒருவரை வாழ வைக்க வேண்டும் எனில் அவர்களை வாழ வைத்து விடுவார்கள். உதாரணம் மகாபாரதத்தில் துரியோதனன் கர்ணனை அரசனாக்கியது போல. ஆனால் ஒருவரை கெடுக்க நினைத்தால் இவர்கள் தான் கெடுவார்கள். உதாரணம் துரியோதனன் பாண்டவர்களை கெடுக்க நினைத்து இவர்களே அதில் மாட்டிக் கொள்வார்கள்.
பரணி நட்சத்திர காரர்கள் ஒருவருக்கு உதவி செய்தால் தக்க சமயத்தில் அதற்கான பிரதிபலன் அவர்களிடம் இருந்து இவர்களுக்கு கிடைக்காது.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குடும்பத்தில் பெண்கள் குடும்பத்தை வழி நடத்தி செல்பவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் குடும்பத்தில் அவர்கள் இருக்கும் போது அவர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைத்திருக்காது.
இலக்கணம்,இராசி அல்லது இலக்கண அதிபதி பரணி நட்சத்திரத்தில் இருந்தால் அவர்களுக்கு இப் பலன்கள் பொருந்தும்.
Tags:
ஆன்மீகம் மற்றும் ஜோதிடம்