பேருந்து வசதி வேண்டி கூட்டு விண்ணப்பம் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதுவது எப்படி என்று இப்போது பார்ப்போம். (இதில் கொடுக்கப்பட்டுள்ள பெயர் மற்றும் முகவரி உதாரணத்திற்கு மட்டுமே)
அனுப்புநர்
க.எழிலன்,
மு.வ.நகர்,
தெப்பக்குளம்,
மதுரை.
பெறுநர்
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
ஐயா,
பொருள்: பேருந்து வசதி கோரல்.
வணக்கம். எங்கள் சிற்றூர் அண்மைக் காலத்தில் மேலக்காலுக்கு மேற்கே 3 கி.மீ தொலைவில் உருவானது. நெசவாளர்கள் இங்கு வாழ்கின்றனர். தெப்பக்குளத்தில் கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் உறுப்பினராகி, தத்தம் வீடுகளில் நெசவு வேலை செய்துவரும் இவர்கள் நூல் முதலியன பெற்று வரவும். நெய்து முடித்தவற்றைக் கொண்டுபோய்க் கொடுக்கவும் நாள்தோறும் மேலக்கால் சென்றுவர வேண்டியுள்ளது. நகர்ப்பேருந்து வசதி இல்லாததால் நடந்தே சென்று வருகின்றனர்.
இங்குத் தொடக்கப்பள்ளி மட்டும் ஒன்று உள்ளது. எனவே, ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க விரும்பும் பிள்ளைகள் மேலக்கால் நடந்தோ மிதிவண்டியிலோ செல்ல வேண்டும். மிதிவண்டி வாங்கித் தரும் வசதி ஏழை நெசவாளர்களுக்கு இல்லை.
எனவே, இவ்வூருக்கு நகர்ப்பேருந்து வசதி கட்டாயம் வேண்டும். காலை 8.30 மணியிலிருந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து கிடைத்தாலும் போதும். உடனே ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இடம்: தெப்பக்குளம்
நாள்: 21/7/2021
தங்கள் உண்மையுள்ள,
பு. எழிலரசன்
உறைமேல் முகவரி:
பெறுநர்:
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
----------------------------------------
குறிப்பு:
பேருந்து வசதி வேண்டி கூட்டு விண்ணப்பம் எழுத வேண்டும் எனில் அனுப்புநரில் பெயருக்கு பதில் ஊர் பொதுமக்கள் என்று குறிப்பிடவும். மேலும் தங்கள் உண்மையுள்ளவுக் கீழ் 4 முதல் 5 பெயர்களை எழுதவும்.